மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க உடனடி ஏற்பாடு

Read Time:3 Minute, 17 Second

thunder.gifஅம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள 7 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். கொழும் 3 இல் அமைந்துள்ள அமைச்சு கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது; கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகள் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொலநறுவை மாவட்டமும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாய பயிர்ச்செய்கைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது குறித்த அறிவுறுத்தல் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 நாள் சமைத்த உணவு வழங்கப்படும். சீரற்ற காலநிலை மேலும் தொடர்ந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மழை காரணமாக 5 ஆயிரத்து 825 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏறாவூர்ப் பற்று மற்றும் மாவடிவேம்பு பிரதேசங்களில் 5 ஆயிரத்து 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொலநறுவை மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வீடுகளும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் பாடசாலைகளிலும், சனசமூக நிலையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பற்றிய அறிக்கைகளை அங்குள்ள பிரதேச செயலக அதிகாரிகள் மூலமாக அமைச்சு பெற்றுவருகிறது.

இதேசமயம் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் விசேட நிலையமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2431589 என்ற தொலைபேசி இலக்கமூலம் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெறமுடிவதுடன் பாதிக்கப்பட்டவர்கள் தமது முறைப்பாடுகளையும் தெரிவிக்க முடியுமென்றார்.

இவ்வூடகவியலாளர் மாநாட்டில் அனர்த்த நிவாரண மத்திய நிலையத்தின் உயரதிகாரிகளுடன் அமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திருமலையில் பல கிராமங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரைமறைவில் சதி நடவடிக்கை
Next post வாரிக்குட்டியூர் பகுதியில் கிளேமோர் தாக்குதல்; இராணுவ வீரர் பலி, 2 பேர் காயம்