மருத்துவர்களின் கவனயீனத்தால் உயிரிழந்த 28 வயது இளைஞன்..!!

Read Time:2 Minute, 0 Second

downloadபன்னல இஹலகொடுவெல்ல பகுதியில் 28 வயது நபர் ஒருவர் வயிற்று வலி காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நீர்கொழும்பு மருத்துவமனையின் அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24ம் திகதி நீர்க்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞர் 25ம் திகதி அவசர சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

எனினும் , நோயாளியின் நிலைமை மோசமடைந்ததால் அதனை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பிறகு மீண்டும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து , இம் மாதம் 2 ம் திகதி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை சரியான முறையில் மேற்கொள்ளப்படாததால் தனது சகோதரன் உயிரிழந்ததாக குறித்த இளைஞரின் மூத்த சகோதரர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நாம் நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் தம்மிகா ஜயலத்தை தொடர்பு கொண்ட போது, நோயாளரின் சார்பில் இதுவரை அவ்வாறு எந்தவொரு முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் உடனடியாக ஆராயவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயம்..!!
Next post ஜீப் வண்டி கவிழ்ந்ததால் பாடசாலை மாணவர்கள் காயம்…!!