திருமணம் செய்வதாக கூறி என்ஜீயர்களிடம் ரூ.2 கோடி பறித்த கோவை இளம்பெண்…!!

Read Time:4 Minute, 56 Second

65fa13f6-a06f-4a08-ae61-72122c3e3a24_S_secvpfநாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சந்தோஷ்குமார் (வயது 32). திருமணத்திற்காக இணையதளத்தில் பதிவு செய்தார்.

அதில் கோவை பீளமேட்டை சேர்ந்த சுருதி (20) என்பவர் அறிமுகம் ஆனார். அவர் சந்தோஷ்குமாரை திருமணம் செய்தவாக கூறி நெருங்கி பழகினார். பின்னர் அவரிடம் ரூ.43 லட்சம் வரை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டார். இது குறித்து கோவை குற்றப்பிரிவு போலீசில் சந்தோஷ்குமார் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் சுருதியை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சிதம்பரம் சிவசக்தி நகரை சேர்ந்த அருள் குமரகுரு ராஜா (28) என்ற என்ஜினீயரும் கோவை போலீசில் புகார் செய்தார். அதில் இணையதளம் மூலம் அறிமுகமான சுருதி தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறினார்.

இதனையடுத்து என்னிடம் அவர் ரூ.50 லட்சத்தை நயவஞ்சகமாக பறித்துகொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். புகார்களையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் இந்த 2 என்ஜினீயர்கள் மட்டுமல்லாது இன்னும் பல என்ஜினீயர்களை சுருதி வீழ்த்தியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் கூறும்போது, இணைய தள திருமணம் தகவல் மையத்தில் தனது புகைப்படத்துடன் பதிவு செய்த சுருதி பணக்கார என்ஜினீயர்களை குறி வைப்பார். அவர்களின் போன் எண்களை பெற்று உங்களை பிடித்திருக்கிறது. முறைப்படி வீட்டுக்கு வந்து பெண் கேளுங்கள் என்று கூறுவார். அழகான முகத்தோற்றமும், இனிமையான குரல் வளமும் கொண்ட சுருதியின் பேச்சை நம்பி சிலர் நேரில் சந்தித்தனர். திருமண நிச்சயம் வரை திருமண நாடகத்தை சுருதி அறங்கேற்றுவார்.

அதற்கு முன்பு ஷாப்பிங் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச்சென்று பெண் பார்க்க நம்பி வந்தவர்களிடம் லட்சக்கணக்கில் பொருட்கள் வாங்கி மோசடி செய்வார். தனக்கு மனைவியாக வரப்போகிறவள் தானே என்று கண் மூடித்தனமாக என்ஜினீயர்கள் செலவு செய்துள்ளனர். அருள் குமரகுரு ராஜாவும் ரூ.50 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.

திருமணத்திற்கு வற்புறுத்தும்போது தனக்கு மூளையில் கட்டியிருப்பதாக கூறி ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டும் பணத்தை கறந்துள்ளார்.

சில வாலிபர்கள் ஓரளவு பணம் செலவு செய்து பார்த்த பின்னர் மேலும் செலவு செய்ய தயங்கினால் அவர்களின் தொடர்பை துண்டித்து விடுவார்.

வேறு சிம்கார்டு போட்டு மீண்டும் இணைய தளத்தில் பணக்கார வாலிபர்களை தேடுவார். பணக்கார வாலிபர்கள் தனது வலையில் வீழ்ந்ததும் அவர்களிடம் செல்போனில் மணிக்கணக்கில் பேசுவார். சுருதியின் குரலில் மயங்கும் வாலிபர்கள் எவ்வளவு செலவு செய்யவும் தயங்கவில்லை.

சில வாலிபர்களிடம் நான் சினிமா நடிகை என்றும். 2 படங்களில் நடித்துள்ளதாகவும் பணம் பற்றாக்குறையால் படங்கள் பாதியில் நிற்பதாகவும், பணம் கொடுத்தால் படங்கள் வெளி வந்து விடும். அதன்பின்னர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி லட்சகணக்கில் பணம் ஏமாற்றியுள்ளார்.

இதுவரை 6 என்ஜினீயர்களிடம் ரூ.2 கோடி வரை சுருதி மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்தனர். சுருதி மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுவண்ணாரப்பேட்டையில் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது…!!
Next post காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!