அமெரிக்கத் தளங்கள் மீது அணுகுண்டு வீசுவோம்: ரஷியா எச்சரிக்கை

Read Time:3 Minute, 41 Second

flag9.gifஐரோப்பிய கண்டத்தில் ஏவுகணைத் தளங்களை அமைத்தால் அதை ஏவுகணை மூலம் அணுகுண்டுகளை வீசித் தாக்கி அழிப்போம் என அமெரிக்காவுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ரஷியாவின் ஏவுகணைப் பிரிவு பொறுப்பு அதிகாரி நிகோலை சோலோத்சோவ் (படம்), செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ஐரோப்பிய கண்டத்தில் இரு இடங்களில் ஏவுகணைத் தளங்களை அமைக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அமெரிக்கா தனது இந்தத் திட்டத்தைக் கைவிடாவிட்டால், போலந்து, செக் குடியரசு ஆகிய இரு இடங்களில் நாங்களும் ஏவுகணைத் தளங்களை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இந்தத் திட்டம் ஏற்கெனவே தீவிரப் பரிசீலனையிலும் உள்ளது. தாங்கள் அமைக்கவுள்ள ஏவுகணைத் தளத்தில் ஒரு சில ஏவுகணைகள் மட்டுமே இடம்பெறும் என்றும் மேலும் அந்த ஏவுகணைத் தளங்கள் ஈரான் போன்ற ரெüடி நாடுகளிடம் இருந்து வரும் ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அமெரிக்கா கூறிவருகிறது. அமெரிக்காவின் இந்தக் கருத்தை எவ்விதத்திலும் நாங்கள் நம்பத் தயாராக இல்லை.

ரஷியாவை சுற்றி ஏவுகணைத் தளங்களை அமைத்து எங்களை மிரட்ட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம் என்பது அதன் நடவடிக்கை மூலமே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

எங்களுடன் உடன்பாடு ஏற்படுத்தினால்…: ஒருவேளை, எங்களுடன் (ரஷியா) அமெரிக்கா உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டால் கூட போலந்திலும், செக் குடியரசிலும் எதிரி நாட்டு ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் 10 ஏவுகணைகளையும், ஒரு ரேடாரையும் மட்டுமே இடம்பெற அனுமதிக்கப்படும். ஏதாவது ஒரு நிலையில் இந்த உடன்பாட்டை அமெரிக்கா மீறும் பட்சத்தில் உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யவும் ரஷியா தயங்காது.

நாங்கள் ரஷியாவை மிரட்ட முயற்சிக்கவில்லை என அமெரிக்கா கூறிவருகிறது. ஆனால், இதுபோன்ற வெற்று வாக்குறுதிகளையும் நாங்கள் நம்பத் தயாராக இல்லை.

கடந்த காலத்தில் இதுபோன்று நம்பியதால்தான் நேட்டோ படை ரஷியாவை சுற்றி வளைத்தது. தற்போது அமெரிக்கா கூறுவதை நாங்கள் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நம்பினால் அதே நிலைமை மீண்டும் ஏற்படலாம்.

துண்டுபட்டுக்கிடந்த இரு ஜெர்மனிகளும் இணைந்தவுடன் அங்கு ஒரு நேட்டோ படை வீரர் கூட இருக்கமாட்டர்கள் என அமெரிக்கா வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அமெரிக்கா அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு ரஷியாவை ஏமாற்றியது என்றார் நிகோலை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கார் ஏறி 3 பேர் இறந்த வழக்கு: 15 வயது சிறுவனுக்கு வலை வீச்சு- காப்பாற்ற விஐபிக்கள் முயற்சி
Next post பெண்களிடம் கேலி: இருவர் கைது