மலேசிய இளவரசி குத்திக் கொலை: கணவர் காயம்

Read Time:1 Minute, 51 Second

Malaysia.Flag.jpgமலேசிய நாட்டு இளவரசி கமரியா சுல்தான் அபுபக்கர் (64) திங்கள்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டார். மேலும், அவரது கணவர் பலத்த காயமடைந்தார். இந்த வெறிச் செயல்களில் ஈடுபட்ட அவரது மகன் இச் சம்பவத்துக்கு பின், தற்கொலை செய்து கொண்டார். மலேசிய நாட்டு மன்னர் பஹாங். இவரது சகோதரி கமரியா சுல்தான் அபுபக்கர். இவரது கணவர் இஸ்மாயில் டுங்கு சுலைமான் (74). இவர்களது மகன் ரிசால் சாஜன் (21).

இவர்கள், கெüன்டன் மாகாணத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் இஸ்மாயிலுக்கும், அவரது மகன் ரிசாலுக்கும் திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தந்தையை தாக்க முயன்றார் மகன். அப்போது தடுக்க வந்த தாய் கமரியாவை கத்தியால் குத்தினார் ரிசால்.

இதில், ரத்த வெள்ளத்தில் இளவரசி கமரியா உயிரிழந்தார். அவரது கணவர் இஸ்மாயில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக போலீஸýக்கு தகவல் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்தில், ரிசால் அளவுக்கு அதிகமான மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த விசாரணையில் ரிசால், போதை மருந்துக்கு அடிமையானவர் என்று தெரியவந்தது. போலீஸôர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அதிகம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் ஆஸ்திரேலியா வலியுறுத்தல்
Next post இஸ்ரேல் தாக்குதலில் 4 ஐ.நா. பார்வையாளர்கள் பலி- இந்திய முகாமும் தரைமட்டம்!