ஓராண்டு விண்வெளி பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பிய வீரர்கள்..!!
நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஓராண்டாக ஆய்வு மேற்கொண்டிருந்த அமெரிக்கா மற்றும் ரஷ்ய வீரர்கள் இன்று பூமிக்கு திரும்பி உள்ளனர். இதன் மூலம் விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த இரண்டாவது வீரர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.
நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர்களான அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்கொட் கெல்லி மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த மிச்செல் கோர்னிகோ ஆகியோர் கடந்த ஆண்டு மார்ச் மாதம், சோயூஸ் விண்கலம் மூலம் விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு மையத்திற்கு ஆய்விற்காக சென்றனர்.
இவர்கள் பூமிக்கு வெளியே 340 நாட்கள் பயணித்து, ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சர்வதேச விண்வெளி மையத்தில் 340 நாட்கள் தங்கி இருந்த இவர்கள், கசகிஸ்தானின் பாலைவனப் பகுதியில் திட்டமிட்டபடி இன்று காலை தரையிறங்கி உள்ளனர்.
340 நாட்கள் விண்வெளி பயணித்தின் போது இவர்கள் 144 மில்லியன் மைல்கள் பயணித்துள்ளனர். பூமியை 5440 முறை சுற்றி வந்துள்ளனர். பூமியின் சுற்று வட்டப்பாதையில் 10,880 முறை சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை இவர்கள் கண்டுள்ளனர். பூமியின் பல்வேறு வண்ணம் கொண்ட 1000 படங்களை ட்விட்டரிலும், இன்ஸ்டகிராமிலும் அவ்வப் போது வெளியிட்டு வந்துள்ளனர்.
இதற்கு முன் 1990 களில் ரஷ்யர் ஒருவர் 438 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து ஆய்வு மேற்கொண்டார். இதுவே இன்றளவும் உலக சாதனையாக கருதப்படுகிறது. இந்த சாதனையை கெல்லி மற்றும் கோர்னிகோ கிட்டதட்ட நெருங்கி உள்ளனர்.
விண்வெளியில் அதிகபட்சமாக மனிதன் எத்தனை நாட்கள் இருக்க முடியும் என்பது குறித்து அமெரிக்கா ஆய்வு நடத்தி வருகிறது. 2030 இல் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் அமெரிக்கா இறங்கி உள்ளதால், அதற்கான முன்னோட்டமாக இதனை கருதுகிறது. ஆனால் கதிரியக்கம் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating