பாகிஸ்தானில் வீட்டுக்கு தாமதமாக வந்த மகளை சுட்டுக் கொன்ற தந்தை…!!

Read Time:1 Minute, 57 Second

38ce728a-3869-42ec-b104-eea05b74e1f1_S_secvpfபாகிஸ்தானில் உள்ள லாகூரைச் சேர்ந்தவர் கோமல் பீபி (18). சம்பவத்தன்று இவர் வெளியே சென்று விட்டு பலமணி நேரம் தாமதமாக வந்தார். அதை அவரது தந்தை கண்டித்தார். தாமதமாக வீடு திரும்பியதற்கான காரணத்தை கேட்டார். அதற்கு அவர் கூறிய காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை.

எனவே தனது மகள் நடத்தையில் சந்தேகம் அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் துப்பாக்கியால் மகள் கோமல் பீபியை சுட்டார். அதை தொடர்ந்து குண்டு பாய்ந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். எனவே வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாகிஸ்தானில் இது போன்ற கவுரவக் கொலைகள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இது போன்ற நடவடிக்கைகளால் ஆண்டுதோறும் அங்கு 100–க்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்படுகின்றனர்.

கவுரவக் கொலையை மையப்படுத்தி ‘எ கேர்ள் இன் தி ரிவர்’ என்ற ஆவணப் படத்துக்கு நேற்று ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.

இப்படத்தை பாகிஸ்தானை சேர்ந்த ஷர்மீன் ஒய்த் சினாய் என்ற பெண் தயாரித்து இருந்தார். எனவே பாகிஸ்தானில் விழா கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் ஒரு பெண் கவுரவக் கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்டி நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு…!!
Next post 82 மீற்றர் தூரம் டிப்பர் வாகனத்தினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நபர்…!!