மெக்சிகோவில் 11 கர்ப்பிணிகள் உள்பட 121 பேருக்கு ஸிகா வைரஸ்…!!

Read Time:1 Minute, 45 Second

063479c5-cecd-4386-beb0-dd8cb67a78a7_S_secvpfஉலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ள ஸிகா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பிரேசிலில் இருந்து கரீபியன் நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு பரவ தொடங்கிய இந்த அபாயகரமான வைரஸ் தற்போது ஆசிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.

பிரேசிலில் 580 பேருக்கு ஸிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக கொலம்பியாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் உள்பட சுமார் 25 ஆயிரம் பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு உள்ளது.

அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிலும் ஸிகா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு தொற்று பரவாத வகையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மெக்சிகோவில் 121 பேருக்கு ஸிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதில் 11 பேர் கர்ப்பிணி பெண்கள் எனவும் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், ஸிகா வைரஸ் தாக்கியவர்களுக்கு ‘குயில்லன் பாரே’ என்று அழைக்கக்கூடிய நரம்பு ரீதியான நோய்கள் ஏற்படும் என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 20 வருடங்கள் சிறை…!!
Next post மாடியிலிருந்து விழுந்த 7வயது சிறுமி சிகிச்சை பலனின்றி மரணம்…!!