அமெரிக்க மாணவர் வடகொரியாவில் கைது..!!

Read Time:1 Minute, 40 Second

adsவடகொரியாவில் இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை கவர முற்பட்டார் என்ற சந்தேகத்தின் கீழ் அமெரிக்க மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு வட கொரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் வேர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான 21 வயதான ஒட்டோ வாம்பயர் என்பவர் வடகொரியா தொடர்பான திட்டங்கள் குறித்த ஆவணங்களை பெற முனைந்த போது கைது செய்யப்பட்டார்.

இந்த விடயம் குறித்து அமெரிக்க மாணவர் இன்று ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக வட கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாம் அதிகாரி ஒருவரிடம் இருந்து பெற முனைந்தமையினை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

வெளிநாட்டவர்கள் இப்படியான குற்றச்செயலில் ஈடுபடும்போது, வட கொரியா அவர்களை சிறைவைப்பதனை வழமையாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டதன் பின்னர், அவருடன் தொடர்பை ஏற்படுத்த எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அவரது குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் அரசிற்கு எதிரான நடவடிக்கையாக கணிக்கப்படுவதாக வட கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிகரெட் புகைப்பதை நிறுத்துமாறு கோரப்பட்டதால் ஆத்திரமடைந்து பஸ்ஸை கடத்திச் சென்ற பெண்…!!
Next post நால்வருக்கு அதிகமானோரை முற்சக்கர வண்டியில் ஏற்றும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…!!