திருமணம் செய்வதாக கூறி பணக்கார வாலிபர்களை மயக்கிய இளம்பெண்: என்ஜினீயர் புகாரால் குடும்பத்துடன் தலைமறைவு…!!

Read Time:4 Minute, 52 Second

1b14e082-a48d-4792-84b4-08a961a8c9e5_S_secvpfநாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 40) சாப்ட்வேர் என்ஜினீயர்.

இவர் திருமணத்துக்கு பெண் தேடுவதற்காக இன்டர்நெட்டில் பெயரை பதிவு செய்திருந்தார்.

இந்தநிலையில் கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த சுருதி (20) என்ற இளம்பெண் சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டார். உங்களை மிகவும் பிடித்துள்ளது. ஆர்.எஸ்.புரம் கோவிலுக்கு வந்தால் நாம் நேரில் சந்திக்கலாம் என கூறினார். இதை நம்பி ஆர்.எஸ்.புரம் வந்த சந்தோஷ்குமாருக்கு சுருதியை பார்த்தவுடன் பிடித்து விட்டது. உடனே சுருதியின் பெற்றோரிடம் பேசி திருமணத்துக்கு நாள் குறிக்குமாறு கூறினார்.

அப்போது சுருதி ‘தற்போது எங்கள் குடும்பம் ஏழ்மையில் உள்ளது. எனவே சில மாதங்கள் கழித்து நாம் திருமணம் செய்து கொள்ளலாம். அதுவரை ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்வோம்’ என கூறினார். இதைத்தொடர்ந்து இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேசி உள்ளனர்.

பின்னர் சுருதி அடிக்கடி சந்தோஷ்குமாரை ஷாப்பிங் அழைத்து சென்று பணத்தை கறக்கத் தொடங்கினார். இவ்வாறாக மொத்தம் 43½ லட்சத்தை இழந்த சந்தோஷ் குமார் விரைவில் சுருதியை திருமணம் செய்து வையுங்கள் என அவரது பெற்றோரிடம் வற்புறுத்தினார். அதன்பிறகு சந்தோஷ் குமாரால் சுருதியை பார்க்க முடியவில்லை.

சுருதிக்கு உடல்நிலை சரியில்லை. அவர் தோழிகளுடன் வெளியே சென்றுள்ளார் என ஒவ்வொரு முறையும் சாக்கு, போக்கு கூறி அவரது பெற்றோர் சுருதியை சந்திக்க விடாமல் செய்தனர். மேலும், திருமண தேதியையும் முடிவு செய்யாமல் காலம் கடத்தினர். இதனால் அவர்கள் மீது சந்தோஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சுருதியை பற்றி சந்தோஷ் குமார் விசாரித்த போது அவர் இதற்கு முன்பு பல வாலிபர்களை ஏமாற்றியது தெரிய வந்தது. அவர்களை போலவே தானும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்தோஷ்குமார் இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் சுருதி மற்றும் அவரது பெற்றோர் மீது குற்றப்பிரிவு போலீசார், இந்திய தண்டனை சட்டம் 120பி–கூட்டுச்சதி, 406– நம்பிக்கை மோசடி, 420– மோசடி ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த, சுருதி தனது பெற்றோருடன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சுருதி இன்டர்நெட்டில் திருமணத்துக்கு பதிவு செய்து வைத்திருக்கும் வசதியானவர்களை பார்த்து அவர்களுக்கு போன் செய்து பேசி அவர்களை தனது வலையில் வீழ்த்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவர்களிடம் தானும் பணக்கார வீட்டு பெண் போல பழகுவதால் வசதி படைத்த வாலிபர்கள் எளிதில் வலையில் வீழ்ந்துள்ளனர்.

சுருதி இதே போன்று புதுச்சேரி மற்றும் நாகை மாவட்டங்களில் பணக்கார வாலிபர்களை மயக்கி லட்சக்கணக்கில் பணம் கறந்துள்ளார். இதுதொடர்பாக அங்கு சுருதி மீது புகார் உள்ளது. அதன்பிறகு கோவைக்கு வந்து பீளமேட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவர் மேலும் பல வாலிபர்களை மயக்கி லட்சக்கணக்கில் சுருட்டியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அவரை பிடித்தால் தான் மொத்தம் எத்தனை வாலிபர்களை ஏமாற்றி உள்ளார்? என்பது தெரிய வரும் என்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓமன் நாட்டில் ஆசியப் பெண்களை வைத்து விபசார விடுதி நடத்திய மூன்று பெண்கள் கைது…!!
Next post காதலிக்காவிட்டால் பெற்றோரை கொன்றுவிடுவேன்: ஒருதலையாக காதலித்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை..!!