போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க பாகிஸ்தான் இலங்கைக்கு உதவும்

Read Time:1 Minute, 47 Second

பாகிஸ்தான் ஊடாக இலங்கைக்கு போதை வஸ்து கடத்திவரப்படுவதைத் தடுப்பதற்கு பாகிஸ்தான் உதவத் தயாராகவுள்ளதாக பாகிஸ்தானின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹமீட் நவாஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஊடகவியலாளர்கள் அவரைச் சந்தித்து உரையாடிய போது அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை – பாகிஸ்தானுடன் செய்துள்ள பாதுகாப்பு உடன்படிக்கையின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் ஊடாக பெருமளவு போதைவஸ்து இலங்கைக்குக் கடத்தப்படுவதாக பத்திரிகையாளர் அவரிடம் கூறியிருந்தனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து ஹெரோயின் போதைவஸ்து கடத்தி வந்த பலர் இலங்கைச் சிறைகளில் உள்ளனர் எனவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு உலகில் ஆகக் கூடுதலான ஹெரோயின் ஆப்கானிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 8200 தொன் ஹெரோயின் இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையூடாக போதைப்பொருள் பாகிஸ்தானுக்குள் கடத்தி வரப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கு முகவர்களால் கடத்தப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post படை வீரர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணம் பாதுகாப்பு அமைச்சு, மத்திய வங்கி நிதி சேகரிப்பு
Next post இந்திய விமான நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம் இ.மெயிலில் தீவிரவாதிகள் மிரட்டல்