இந்திய ராணுவ உயர்மட்ட குழு இலங்கை பயணம் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலுக்கு ஆலோசனை வழங்குகிறது

Read Time:4 Minute, 37 Second

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையை சேர்ந்த வல்லுனர்கள் அடங்கிய உயர்மட்ட குழு, இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறது. விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இலங்கை விமானப் படையினருக்கு முக்கிய ஆலோசனை வழங்குகிறது. பத்திரிகை தகவல் இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. அனுராதபுரம் விமானபடை தளத்தில் விடுதலைப் புலிகளின் கடற்புலி மற்றும் வான்புலி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 10 விமானங்கள் அழிக்கப்பட்டன. எனவே விடுதலைப் புலிகளின் விமானப்படையை (வான்புலிகள்) சமாளிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இலங்கை விமானப்படையின் தரத்தை உயர்த்த, ஏற்கனவே பாகிஸ்தான் உதவி செய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையை சேர்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவினர், இன்று முதல் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை, இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக கட்சிகள் எதிர்ப்பை மீறி

இந்தியாவின் தென்பகுதி மாநிலமான தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் எதிர்த்தபோதிலும், இலங்கை விமானப் படைக்கு தேவையான கருவிகளை இந்தியா வழங்கி உள்ளது. மேலும் இலங்கை விமானப்படையினருக்கு பயிற்சியும் அளித்துள்ளது. தற்போது விடுதலைப் புலிகள் வசம் இருக்கும் பகுதியை கைப்பற்ற ராணுவம் போராடி வருகிறது.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் பொருட்டு இந்தியாவின் உயர்மட்ட பாதுகாப்பு குழு இலங்கையில் பயணம் மேற்கொள்கிறது. நாளை (இன்று) முதல் இலங்கையில் பயணம் செய்யும் அந்த குழுவில் ராணுவம், விமானப்படை ஆகியவற்றின் வல்லுனர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய தூதரகம்

இலங்கை ராணுவ அதிகாரிகளுடன் அவர்கள் பேச்சு நடத்துகிறார்கள். இலங்கை விமானப்படையின் தரத்தை நவீனப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இந்திய குழுவினர் ஆலோசனை வழங்க உள்ளனர்.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்திய ராணுவ குழுவினர் வருகை குறித்து கருத்து கேட்பதற்காக, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டனர். ஆனால், உடனடியாக கருத்து தெரிவிப்பதற்கு யாரும் கிடைக்கவில்லை.

தாக்குதல் அபாயம்

இதற்கிடையே, `ஆபரேசன் தட்சிண் பிரஹார்’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்கள், அணு உலைகள், எண்ணை நிறுவனங்களை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், `அன்னிய தீவிரவாதிகளின் வான்வழி தாக்குதல் அபாயம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப் படுவதாக’ ராணுவம் விளக்கம் அளித்தது.

இந்த தகவலை குறிப்பிட்டுள்ள இலங்கை பத்திரிகை, `இந்தியாவை பொறுத்தவரை வான் வழியாக தாக்கும் அன்னிய தீவிரவாதிகள் என்றால் அது விடுதலைப் புலிகள்தான்’ என்று சுட்டிக் காட்டி உள்ளது. எனவே, விடுதலைப் புலிகளின் வான்படையை அழிப்பதற்காகவே, இலங்கை விமானப் படைக்கு இந்தியா உதவி செய்ய இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இமயமலை பனி உருகினால் இந்தியா பாக்., போர் வரும்?
Next post பின்லேடன் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருக்கிறார் முஷரப் ஒப்புக்கொண்டார்