விமான குண்டு வீச்சில் பிரபாகரன் காயம்; இலங்கை பத்திரிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!!

Read Time:3 Minute, 6 Second

20071127004.jpgஇலங்கை விமானப்படை குண்டு வீச்சில், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் லேசான காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நீடித்து வருகிறது. பிரபாகரன் காயம்:விமானப்படை நடத்திய குண்டு வீச்சில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலியானார். இந்த தாக்குதலை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை வீழ்த்தவும் இலங்கை ராணுவம் விïகம் அமைத்து வந்தது. இந்த நிலையில், 2 வாரங்களுக்கு முன்பு நடந்த விமான தாக்குதலில் பிரபாகரன் லேசான காயத்துடன் உயிர் தப்பியதாக இலங்கை பத்திரிகை ஒன்றில் நேற்று தகவல் வெளியாகி உள்ளது. பதுங்கு குழியில் “நேஷன்’ என்ற பத்திரிகையில், பிரபாகரன் மீது நடந்த தாக்குதல் பற்றி கூறப்பட்டு இருப்பதாவது- இலங்கை விமானப்படையின் இந்த தாக்குதல், கடந்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி, மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் நடைபெற்றது. அந்த சமயத்தில், இலங்கையின் வடக்கு மாவட்டமான கிளிநொச்சியில் ஜெயந்தினி நகர் அருகில் உள்ள பதுங்கு குழியில் பிரபாகரன் தங்கி இருந்தார். விமான குண்டு வீச்சில் அந்த பதுங்கு குழியின் ஒரு பகுதி நொறுங்கியதால் அவற்றின் சிதறல்கள் தாக்கியதில் பிரபாகரனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. வன்னி காட்டு பகுதியில் உள்ள ரகசிய இடம் ஒன்றில் செயல்பட்டு வரும் விடுதலைப்புலிகள் மருத்துவ பிரிவின் அவசர சிகிச்சை பிரிவில் பிரபாகரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.” இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்க வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களின் மன உறுதி பாதிக்கப்படும் என்பதால், குண்டு வீச்சில் பிரபாகரன் காயம் அடைந்த தகவலை விடுதலைப்புலிகள் மூடி மறைத்து விட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இலங்கை பத்திரிகையில் வெளியாகி உள்ள இந்த பரபரப்பான தகவல் குறித்து, விடுதலைப்புலிகளோ அல்லது ராணுவத்தினரோ இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 5 இந்திய வம்சாவளியினர் கைது தொடர்பாக 13 அமைப்புகள் மலேசியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை
Next post பிரிட்டனுடன் ஸ்காட்லாந்து தொடர்ந்து இணைந்திருக்குமா?