வெளிநாட்டு சிறைகளில் 5,197 இந்தியர்கள்!!

Read Time:3 Minute, 3 Second

வெளிநாடுகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இந்தியர்களில், ஐக்கிய அரபு நாடுகளில் தான் அதிகபட்சமாக 1,059 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் இந்தியர்கள் மொத்தம் 5,197 பேர். ஆசிய நாடுகளில், 4,681 பேரும், மற்ற நாடுகளில் 516 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் 518 பேரும், வங்கதேசத்தில் 408, நேபாளத்தில் 317 , இலங்கையில் 59 , பூடானில் 37 இந்தியர்களும் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மொரீஷியசில், போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட 23 இந்தியர்களும், சீனாவில், திருட்டு, போதை மருந்து கடத்தல், போலி ஆவணங்கள், கொள்ளை குற்றங்களுக்காக 55 பேரும், மியான்மரில், சட்டவிரோத குடியேற்றம், போதை குற்றங்களுக்காக 36 இந்தியர்களும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். வளைகுடா நாடுகளை பொறுத்தவரை, சவுதியில் தான் அதிகபட்சமாக 939 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குவைத்தில் 252, பக்ரைனில்114, புருனேயில் 55, ஓமனில் 42 இந்தியரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கத்தாரில், கொலை, திருட்டு, போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்காக 32 பேரும், ஏமனில் கொலை வழக்கில் ஒரே ஒரு இந்தியர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில், 447 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். இதே போல மலேசியாவிலும் 142 இந்தியர்கள் சிறையில் உள்ளனர். தாய்லாந்தில், போதை மருந்து, ஆயுதம் கடத்துதல், திருட்டு வழக்குகளில் 40 இந்தியர்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

ஆள்கடத்தல், குடியேற்ற விதி மீறல் குற்றங்களுக்காக, பிலிப்பைன்சில் 12 இந்தியர்கள் சிறை தண்டனை பெற்றுள் ளனர்.

அமெரிக்காவில், குடியேற்ற விதி மீறல், கொலை, திருட்டு வழக்கில் 60 இந்தியர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். பிரிட்டனில், 252 இந்தியர்களும், கனடாவில் 21 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றங்கள் வெளியிடப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post காதலியை கண்டுபிடிப்பதில் அபாரம் * ஆப்ரிக்க யானைகளின் அறிவு திறன்
Next post படை வீரர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணம் பாதுகாப்பு அமைச்சு, மத்திய வங்கி நிதி சேகரிப்பு