ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு 7 இந்திய நிறுவனங்கள் வெடி பொருட்கள் சப்ளை…!!

Read Time:2 Minute, 10 Second

af6162ca-3232-4d2a-a340-7794a14ce3c0_S_secvpfஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு 7 இந்திய நிறுவனங்கள் வெடி பொருட்கள் சப்ளை செய்துள்ளன.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த ராபியா, கிர்குக், மொசூல், சிக்ரித் மற்றும் கொபானி ஆகிய நகரங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன. அங்கு வெடி குண்டுகள் தயாரிக்க பயன்படும் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. பறிமுதல் செய்யப்பட்டது.

அவை குறித்து சி.ஏ.ஆர். என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில் வெடி குண்டு தயாரிக்க பயன்படும் ரசாயன மூலப் பொருட்களை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு 20 நாடுகள் சப்ளை செய்திருப்பது தெரிய வந்தது.

அவற்றில் இந்தியா, பிரேசில், லெபனான், அமெரிக்கா, துருக்கி, ரஷியா, ருமேனியா, நெதர்லாந்து, சீனா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, செக் குடியரசு உள்ளிட்ட முக்கிய நாடுகள் அடங்கும். இதில் இந்தியாவை சேர்ந்த 7 நிறுவனங்கள் டெட்டனேட்டர்கள், டெட்டனேட்டிங் கார்டு மற்றும் சேப்டி பியூசஸ் போன்ற முக்கிய பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளன. இவை இந்திய ஏற்றுமதி சட்டத்தின் மூலம் முறையான லைசென்சு பெற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

துருக்கியை சேர்ந்த 13 நிறுவனங்கள் வெடி குண்டுகள் தயாரிக்க பயன்படும் மூல ரசாயன பொருட்களை அதிக அளவில் சப்ளை செய்துள்ளன. மேலும் வெடி குண்டுகளை வெடிக்க செய்ய பிரபலமான ஒரு நிறுவனத்தின் செல்போன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனா: விபரீதத்தில் முடிந்த ராட்டின சவாரி – கீழே விழுந்தவர் பரிதாப பலி – வீடியோ இணைப்பு…!!
Next post ஈராக்: ஷியா மசூதியில் இரட்டை தற்கொலைப்படை தாக்குதல் – 15 பேர் பலி…!!