ஆசாரிபள்ளத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர் சாவில் மர்மம்: தந்தை போலீசில் புகார்…!!

Read Time:4 Minute, 24 Second

9b4acd2a-beea-4c91-89cd-2cf05f88f8c0_S_secvpfதிருச்சி மாவட்டம் லால்குடி பாலமுத்து நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் திருவாரூர் மாவட்டத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மகன் பரிதி செம்மல் (வயது 22). இவர் குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கி இருந்த பரிதி செம்மல் நேற்று முன்தினம் இரவு தனது அறைக்கு தூங்கச் சென்றார்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவரது நண்பர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது பரிதி செம்மல் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து குலசேகரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிதி செம்மல் உடலை பார்த்து சக நண்பர்கள் கண்கலங்கினார்கள்.

பரிதி செம்மல் பலியானது குறித்து திருச்சியில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகன் பலியான தகவலை கேட்டதும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நேற்று மாலை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

தன்னுடைய மகன் பரிதி செம்மல் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறினார்கள். மேலும் இது தொடர்பாக தக்கலை இன்ஸ்பெக்டர் ராஜ சுந்தரத்திடம் பலியான பரிதி செம்மலின் தந்தை பாலகிருஷ்ணன் புகார் மனு ஒன்றும் அளித்தார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:–

எனது மகன் பரிதி செம்மல் நன்கு படித்து வந்தார். சக நண்பர்களிடமும் நெருங்கி பழகி வந்தார். திடீரென அவர் தற்கொலை செய்ததாக கூறியது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களை நியமித்து வீடியோ பதிவின் மூலமாக உடலை பிரேத பரிசோதனை செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.

இதற்கிடையில் பலியான பரிதி செம்மலின் தாயார் எனது மகன் தினமும் என்னுடன் பேசுவார். நேற்று முன்தினம் பேசும்போது வருகிற 28–ந்தேதியுடன் எனக்கு தேர்வு முடிந்து விடும். நான் படிப்பை முடித்து டாக்டர் பட்டத்துடன் ஊருக்கு வருவதாக கூறினார். இந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

பலியான பரிதி செம்மலின் சகோதரர் ஒருவரும் ஏற்கனவே இறந்து விட்டார். தற்போது 2–வது மகனான பரிதி செம்மலும் பலியானதால் அவரது உறவினர் மற்றும் பெற்றோர் கண் கலங்கினர்.

இதற்கிடையில் பரிதி செம்மல் மரணம் குறித்து குலசேகரம் போலீசார் அவருடன் தங்கி இருந்த சக மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அவரது சாவிற்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பரிதி செம்மலின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ் இளைஞன் மர்மமான முறையில் கிளிநொச்சியில் பலி..!!
Next post கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் பாலியல் பலாத்கார குற்றசாட்டில் இருந்து விடுவிப்பு…!!