லிபியாவில் 12 ராணுவ அதிகாரிகளின் தலையை துண்டித்து கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்…!!

Read Time:1 Minute, 33 Second

d635a632-f916-40cc-ae23-bf18e5daef22_S_secvpfலிபியா நாட்டில் நீண்ட கால அதிபராக இருந்த முகமது கடாபி 2011–ம் ஆண்டு புரட்சி படையினரால் கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து அங்கு உள்நாட்டு குழப்பம் நிலவி வருகிறது.

இதை பயன்படுத்தி சில பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள சபரதா நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர். அவர்கள் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சிலரை ஏற்கனவே சிறை பிடித்து இருந்தனர்.

இந்த நிலையில் சபரதா நகரை மீட்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனால் சில பகுதிகளை கைவிட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் பின்வாங்கினார்கள்.

அப்போது தங்கள் பிடியில் இருந்த 12 ராணுவ அதிகாரிகளை தலை துண்டித்து கொலை செய்தனர். அவர்களுடைய பிணம் சாலையில் வீசப்பட்டு கிடந்தது. அங்கு ராணுவத்தினருக்கும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இன்னும் பல நகரங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடக்கடவுளே!! இந்த பிஞ்சு குழந்தைக்கும் லவ் பாருங்களே…!!
Next post புயலால் பாதிக்கப்பட்ட பிஜி நாட்டிற்கு 40 டன் உதவி பொருட்களை அனுப்புகிறது இந்தியா..!!