நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ கண்டிக்கு விஜயம்…!!

Read Time:1 Minute, 52 Second

190f575e-383a-487d-86e4-91614ab4c141இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ 25.02.2016 அன்று கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

கண்டி தலதா மாளிகைக்கு சென்ற அவருக்கு பாரம்பரிய முறைபடி வரவேற்பு அளிக்கப்பட்டது. மிகவும் மரியாதைக்குரிய முறையில் பாதணிகளை வெளியே கழற்றி வைத்து விட்டு மாளிகைக்குள் சென்ற அவர் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டார். அத்துடன் அங்கு இருந்த ஒரு அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். இதில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் உடன் சென்றிருந்தார்.

அதன்பின்னர் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ பேராதெனிய பூங்காவை பார்வையிடுவதற்கு சென்றார். அங்கு விசேட பிரமுகர்களுக்கான புத்தகத்தில் கையொப்பம் இட்ட அவர் தனது வருகையை நினைவு கூறும் வகையில் மரம் ஒன்றையும் நாட்டி வைத்தார்.

அத்துடன் 90 ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அப்போதையா நியூசிலாந்து பிரதமர் பேராதெனிய பூங்காவில் மரம் ஒன்றையம் நாட்டி இருந்தார்.

அது தற்போது பெரிய மரமாக வளர்ச்சி கண்டுள்ளது. அந்த மரத்தையும் பார்வையிட்ட தற்போதை பிரதமர் அதன் அருகில் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டமை குறிப்பிடதக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் திடீர் மின் தடை – பொல்பிட்டிய உப மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம்..!!
Next post தூக்கமின்றி இதய நோயால் தவிக்கும் அமெரிக்கர்கள்…!!