பொது இடத்தில் பலத்த சத்தத்துடன் ஏப்பம் விட்டவருக்கு அபராதம்..!!

Read Time:1 Minute, 36 Second

downloadஆஸ்திரியா தலைநகர் வியன்னாவை சேர்ந்தவர் எடின் மெகிக் இவர் மதுபான பாரில் ஊழியராக பணிபுரிறார். இவர் அதிக அளவு வெங்காயம் கலந்து கைபேப் என்ற உணவை சாப்பிட்டார்.

அதன் பின்னர் வியன்னாவில் மிகவும் புகழ்பெற்ற பிராடர் பூங்காவில் காலாற வாக்கிங் சென்றார். அதன் பின்னர் ஓய்வு எடுக்க ஒரு இடத்தில் அமர்ந்த போது பலத்த சத்தத்துடன் ஏப்பம் விட்டார்.

அப்போது திடீரென ஒரு கை அவரது தோள் பட்டையை பலமாக பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திரும்பி பார்த்தார். அங்கு சீருடையில் ஒரு போலீஸ்காரர் நின்றிருந்தார்.

அவரிடம் உங்களை கைது செய்கிறேன் என்றார். உடனே எடின் எதுவும் தெரியாமல் ஏன் என்னை கைது செய்ய வேண்டும் என திருப்பி கேட்டார்.

அதற்கு அவர் “நீங்கள் பொது நாகரீகம் இன்றி பலத்த சத்தத்துடன் ஏப்பம் விட்டீர்கள். இது பொது மக்களுக்கு இடையூறு அளித்துள்ளது” என்றார்.

அதை தொடர்ந்து எடின் மெகிக்கு 70 யூரோ அதாவது ரூ.5500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தகவலை அவர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்து வனவிலங்கு காப்பகத்தில் சிசேரியன் மூலம் பிறந்த கொரில்லா குட்டி…!!
Next post நேபாளத்தில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 23 பேர் பலி…!!