பேண்ட் பாக்கெட்டில் செல்போன்களை வைத்திருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படலாம்: அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

Read Time:1 Minute, 50 Second

3dd58937-cb04-47c8-8daa-e9261a222bb8_S_secvpfகைபேசிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மற்றும் உஷ்ணசக்தியானது ஆண்களின் விந்தணுக்களை பாதித்து, அவற்றை செயலிழக்க செய்துவிடுவதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இதுமட்டுமின்றி, ஒருநாளில் குறைந்தது இரண்டுமணி நேரம் கைபேசிகளை பயன்படுத்துபவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேபோல், சார்ஜரில் இருக்கும் கைபேசியை எடுத்துப் பேசுபவர்களும், படுக்கைக்கு அருகாமையில் சார்ஜ் போடுபவர்களும் இதைவிட இருமடங்கு அதிக பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.

எனவே, திருமணமாகி புதிய வாரிசை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்கள் தங்களது பேண்ட் பாக்கெட்களில் கைபேசிகளை வைக்காமல் இருப்பதும், பேட்டரி ரீசார்ஜ் செய்யும் வேளைகளில் செல்போன்களை அணைத்து வைத்திருப்பதும் பாதுகாப்பானது என இந்த ஆராய்ச்சி தொடர்பான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளுக்குநாள் செல்போன் விற்பனையும், ஆண்களிடையே மலட்டுத்தன்மையும் அதிகரித்துவருவது தொடர்பாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் இவை இரண்டுக்குமே நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லொறியிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு..!!
Next post இங்கிலாந்து வனவிலங்கு காப்பகத்தில் சிசேரியன் மூலம் பிறந்த கொரில்லா குட்டி…!!