“சுவிஸ் பொங்கியெழும் மக்கள் படை”யினரின் தகவல்களும் வேண்டுகோளும்…

Read Time:12 Minute, 37 Second

Swiss.Flag.jpgசுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக நாளையதினம் பாரியளவில் கறுப்புஜூலை தினத்தை அனுஸ்டிக்கப் போவதாக புலிகளின் அமைப்பு அறிவித்தல் விடுத்திருந்த போதிலும் இன்றையதினம் இந்நிகழ்வு எவரும் எதிர்பாராத வகையில் மிகவும் சாதாரணமாகவே சுவீசில் உள்ள புலிகளின் தமிழ் இளைஞர் அமைப்பான ‘ரி.வை.ஓ” என்ற அமைப்பால் அனுஷ்டிக்கப்பட்டது.

இருதினங்கள் மேற்படி நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதியை சுவிஸ் nஐனீவா பொலிசார் வழங்கியுள்ளனர். இன்று சுமார் ஐம்பது தொடக்கம் என்பது சிறுவர் சிறுமியரை அழைத்துச் சென்று ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் அமர வைத்து புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையை எதிர்த்து கவனயீர்ப்புப் போராட்டமொன்றை புலிகள் அமைப்பு நடத்தியது.

இதில் கலந்து கொண்டவர்கள் ‘ரி.வை.ஓ” வின் உடையான நீல உடைகளிலும், இன்னும் சிலர் தாம் விரும்பிய உடைகளிலும் காணப்பட்டனர்.

இதுவரை காலமும் உலகில் எந்த இடத்திலும் புலிகள் நிகழ்வுகளை நடத்தும்போது மேற்கொண்ட முறையில் இம்முறை சுவிஸில் பல மாற்றங்களைக் காணக்கூடியதாக இருந்தது. அதாவது எந்த ஒரு நாட்டில் எந்தவொரு போராட்டமோ, பேரணியையோ புலிகளால் நடத்தும்போது, முக்கியமாக புலிக்கொடிகளும், பிரபாகரனின் படமேந்திய பதாகைகளையும் தாங்கியபடி நடத்தி வந்தனர். ஆனால் இம்முறை சுவிட்ஸர்லாந்து நாட்டின் கொடியை மாத்திரமே இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டோர் பறக்க விட்டபடி அமைதியாக அமர்ந்திருந்தனர்.

இதற்கான காரணம் யாதெனில் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளை தடைசெய்த பின்னர் தற்போது புலிகளின் முக்கிய தளங்களாகவுள்ள நோர்வேயிலும், சுவிட்ஸர்லாந்திலும் புலிகளை தடை செய்வதற்கான முயற்சிகளை அந்நாடுகளின் அரசாங்கங்களும், தமிழ் பொது அமைப்புக்களும் மேற்கொண்டு வரும் நிலையில் இங்கும் தாம் தடை செய்யப்பட்டு விடலாமென்ற நிலையிலேயே இவ்வாறு இந்நிகழ்வுகள் மேற்படி முறைகளில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டோரை சுவிஸ் பொங்கியெழும் மக்கள் படைப் பிரிவினைச் சேர்ந்தவர்களாகிய நாம் புகைப்படம் எடுத்துள்ளதுடன், மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டோரின் பெயர் விபரங்களையும், இவர்கள் குறித்த முழுத்தகவல்கள் உட்பட சகல விபரங்களையும் சேகரித்து வருகின்றோம்.

சுவீசில் புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டாய நிதிவசூலிப்பு, இளைஞர்களையும், சிறுவர் சிறுமியரையும் சுவீசில் தமது அமைப்புக்குள் கட்டாயமாக இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் உட்பட்ட புலிகளின் பல்வேறுபட்ட சட்டவிரோத நடவடிக்கைகளையும், மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் புலிகள் குறித்த தகவல்களையும் நாம் திரட்டி வருகின்றோம்.

இவ்வாறான புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் குறித்தும் எமக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்பினை வழங்குமாறு சுவிஸ் பொங்கியெழும் மக்கள் படைப்பிரிவினராகிய நாம் சுவிஸ்வாழ் தமிழ்மக்களிடம் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

இவ்வாறான ஒத்துழைப்புகள் தான் சுவிஸில் புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கெதிரான சட்டநடவடிக்கைகளை சுவிஸ் அரசாங்கத்துடன் இணைந்து நாம் மேற்கொள்வதற்கு எமக்கு உதவியாக இருக்குமென்று தெரிவித்துக் கொள்வதுடன், தமிழ் மக்களின் நலன்கருதி மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைகளுக்கு அனைவரினது ஒத்துழைப்பையும் சுவிஸ் பொங்கியெழும் மக்கள் படைப்பிரிவினராகிய நாம் வேண்டி நிற்கின்றோம்.

(இன்று எம்மால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நாளையதினம் அனைத்து இணையத்தளங்கள் மூலமும் பிரசுரிக்கப்படும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட சிறுவர் சிறுமியரின் பெற்றோர்களுக்கு ஏற்படும் சட்டரீதியான அசௌகரியங்களுக்கு நாம் பொறுப்பாளிகளல்ல.) நன்றி

சுவிஸ் பொங்கியெழும் மக்கள் படைப்பிரிவு. -24.07.2006.
தொடர்புகட்கு….…. [email protected]

**********************************************************
swiss.jpg‘சுவிஸ் பொங்கியெழும் மக்கள் படை”யினரின் தகவல்கள்- சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக கறுப்புஜூலை தினத்தை நேற்றையதினம் சுவீசில் உள்ள புலிகளின் தமிழ் இளைஞர் அமைப்பான ‘ரி.வை.ஓ” என்ற அமைப்பால் அனுஷ்டிக்கப்பட்டது. சுமார் ஐம்பது தொடக்கம் என்பது சிறுவர் சிறுமியரை அழைத்துச் சென்று ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் அமர வைத்து புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையை எதிர்த்து கவனயீர்ப்புப் போராட்டமொன்றை புலிகள் அமைப்பு நடத்தியது.

இதுகுறித்து புலிகளின் புதினம், பதிவு, நிதர்சனம் போன்ற இணையத்தளங்களில் வெளியான பொய்யான செய்திகள் தொடர்பான உண்மைத் தகவல்களை சுவிஸ் பொங்கியெழும் மக்கள் படைப்பிரிவினராகிய நாம் சேகரித்துள்ளோம்.

1)புலிகளின் தகவல்…. ஜெனீவாவில் ஐ.நா. முன்றலில் தமிழ் இளையோர் அமைப்பினரும் சுவிஸ் தமிழர் பேரவையினரும் தொடர்ச்சியான ஒரு மாத கால கவனயீர்ப்பு போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ளனர்…

உண்மைத் தகவல்… நேற்றையதினம் சுமார் ஐம்பது தொடக்கம் என்பது சிறுவர் சிறுமியரை அழைத்துச் சென்று ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் அமர வைத்து புலிகளால் நடாத்தப்பட்ட கூத்து நேற்று மதியம் ஒருமணிமுதல் மாலை ஐந்துமணிவரை மட்டுமே நடைபெற்றுள்ளது. அதன்பின் அனைவரும் கலைந்து ஆட்டம்பாட்டத்துடன் தாம் வந்த வாகனத்தில் திரும்பிச் சென்றுள்ளனர்.

அத்துடன் புலிகளின் செய்தி குறித்து நாம் (சுவிஸ் பொங்கியெழும் மக்கள் படைப்பிரிவு) சுவிஸ்பொலிசாரிடம் விசாரித்த போது ‘அதுவோர் தவறான தகவலெனவும,; நாம் திங்கள் செவ்வாய் ஆகிய இருநாட்களுக்கு மட்டும் அதுவும் மதியம்12மணி முதல் மாலைஐந்துமணி வரை மட்டுமே (ஐந்து மணித்தியாலங்களுக்கு) இலங்கைப் பிரச்சினையெனும் காரணத்தினால் அனுமதி கொடுத்ததாகவும், ஆயினும் சுவிஸில் புலிகளின் நடவடிக்கைகள் குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பாக கரும்புலிகள்தினமென தற்கொலைக் கொலையாளிகளின் தினத்தை சுவிஸில் நடாத்தியது குறித்து தீவிரவிசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளனர்.

2)புலிகளின் தகவல்…. சுவிஸிலாந்தின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்புப் பிரதிநிதி ஆய்டா நெய்டா அம்மையாரிடம் ஐ.நா. செயலாளர் நாயகம் கோபி அனானுக்கான மனு கையளிக்கப்பட்டது. இச்சந்திப்பு இன்று(24.07.06) சுவிஸ் நேரம் முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது…

உண்மைத் தகவல்… அப்படியெந்தவித சந்திப்பும் நேற்று நடைபெறவில்லையென்பதுடன் புலிகள் குறிப்பிட்டுள்ள பெயரும் பதவியும் தவறானதென்பதும் குறிப்பிடத்தக்கது. மனிதஉரிமைகள் உயர்ஸதானிகர் அலுவலகத்தின் இலங்கை விவகாரம் தொர்பான அலுவலகரே (DeskOfficer) செல்வி.ஆய்டா நெயாட் என்பவர் ஆகும்.

இவரிடம் நாம் (சுவிஸ் பொங்கியெழும் மக்கள் படைப்பிரிவு) புலிகளின் செய்தி குறித்து விசாரித்தபோது தன்னுடன் எந்தவித சந்திப்போ மகஐர் கையளிப்போ நேற்று நடைபெறவில்லையெனவும் இன்றுதான் தன்னுடனான சந்திப்புக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தான் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்புப் பிரதிநிதி இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய பிந்திய செய்திகளின்படி… இன்றையதினம் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக கறுப்புஜூலை தினத்தை நினைவுகூர்ந்து புலிகளால் நடாத்தப்பட்டதில் சுமார் 150முதல் 200பேர் வரையிலானவர்களே கலந்து கொண்டனர்.

அதிலும் குறிப்பாக சிறுவர்சிறுமியர்களும் இளைஞர் யுவதிகளுமே பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர் சுவிஸில் சுமார் முப்பத்தையாயிரத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழ்மக்கள் வாழ்கின்ற போதிலும் புலிகளால் நடாத்தப்பட்ட போராட்டத்தில் இருநூறுக்கும் குறைவான தமிழ்மக்களே நான்கு பஸ்களில் அழைத்து வரப்பட்டு பங்குபற்றியதில் இருந்து புலிகளின் செல்வாக்கு தற்போது எந்தளவில் உள்ளதென்பதை அறியமுடியும்.

(புலிகளின் இன்றைய நிகழ்ச்சியின் புகைப்படங்களும் சுவிஸ் பொங்கியெழும் மக்கள் படைப்பிரிவினராகிய எம்மால் எடுக்கப்பட்டுள்ளதென்பதையும் விரைவில் இதனையும் அனைத்து இணையத்தளங்கள் ஊடாகவும் பிரசுரிக்கப்படுமென்தையும் அறியத் தருகின்றோம்.)

சுவிஸ் பொங்கியெழும் மக்கள் படைப்பிரிவு. -25.07.2006.
தொடர்புகட்கு…. [email protected]

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post லெபனானின் முக்கிய நகரை இஸ்ரேல் படை சுற்றி வளைத்தது
Next post லெபனானுக்கு, சவுதி அரேபியா 1.5 பில்லியன் டாலர்கள் உதவி