சாக்லெட் சாப்பிட்டால் மூளைத் திறன் வளரும்! ஆய்வில் தகவல்..!!

Read Time:2 Minute, 11 Second

downloadசாக்லெட் பிரியர்களுக்கு இன்னும் இனிப்பான செய்தி…

அதிகம் சாக்லெட் சாப்பிடுவதால் மூளையின் செயல் திறன் அதிகரிப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.download

தெற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம், அமெரிக்காவைச் சேர்ந்த மேய்ன் பல்கலைக்கழகம், லக்ஸம்பர்க் மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து அந்த ஆய்வை மேற்கொண்டன.
இதுகுறித்து “அப்படைட்’ அறிவியல் இதழில் வெளியான கட்டுரையில், ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறியதாவது:

சாக்லெட் சாப்பிடுவதால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
23 முதல் 98 வரையிலான வயது கொண்ட 968 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சாக்லெட் உண்பதால் அவர்களது மூளையில் ஏற்படும் மாற்றங்களை அளவிட, அந்த 968 பேரும் பல்வேறு வகையான அறிவுத் திறன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

அந்தப் பரிசோதனைகளில், அடிக்கடி சாக்லெட் உண்பதால் வடிவங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல், உடனடி நினைவாற்றல், பரிசோதித்தல், சிறந்த தீர்வு காணுதல் போன்ற மூளையின் பல்வேறு செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதய நாளங்களுக்கு சாக்லெட்டால் ஏற்படும் பலன்கள் குறித்து ஏற்கெனவே தெரியும்.

எனினும், மூளை நரம்புகளுக்கும் சாக்லெட்டுகள் நன்மை அளிப்பது இந்த ஆய்வில்தான் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது என அந்தக் கட்டுரையில் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post களுவாஞ்சிக்குடி பகுதியில் அடையாளந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்பு…!! (படங்கள்)
Next post எமனாக வந்த எருமை – உயிர் போன பரிதாபம்..!!