பிஜி தீவை சூறையாடிய வின்ஸ்ட்டன் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு…!!

Read Time:3 Minute, 10 Second

94db0677-c16a-4c9b-a576-8f522926a3b7_S_secvpfபசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் சுமார் 300 தீவுகளைக் கொண்ட பிஜி நாட்டை மணிக்கு 230 முதல் 325 கிலோமீட்டர் வேகத்தில் சுழற்றியடித்த வின்ஸ்ட்டன் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

உரிய நேரத்தில் பிஜி அரசு செய்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் பலி எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி ஜூலி பிஷப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புயலின் சீற்றத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகிப் போய் கிடக்கின்றன. பல லட்சம் ஏக்கரில் விளைவிக்கப்பட்டிருந்த உணவுப் பயிர்கள் நாசமடைந்தன.

சுமார் ஒன்பது லட்சம் மக்கள் வாழும் இந்த தீவுக் கூட்டங்களின் பல பகுதிகளில் மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடாக அமைக்கப்பட்டுள்ள 758 நிவாரண முகாம்களில் ஏராளமான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிஜிக்கு சுற்றுலா வந்த ஆஸ்திரேலிய மக்கள் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் பேர் ஓட்டல் அறைகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

சேத நிலவரத்தை நேரில் சென்று பார்வையிடுமாறு மந்திரிகளையும், அதிகாரிகளையும் அறிவுறுத்தியுள்ள பிரதமர் பிராங்க் பைனிமராமா, நாடு முழுவதும் ஒருமாத காலத்துக்கு அவசர நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு சுமார் 36 மணி நேரத்துக்கு பின்னர் இன்று காலை தளர்த்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினரும், ராணுவத்தினரும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேங்கி நிற்கும் அசுத்த நீரில் இருந்து உருவாகும் நோய்கிருமிகளால் மக்களுக்கு தொற்றுநோய்கள் பரவாதபடி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின..!!
Next post மது போதையினால் பறிபோன உயிர்…!!