உதடுகளை வைத்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியும் : ஆய்வு தரும் தகவல்..!!
காளையருக்கோ கன்னியர்க்கோ உதடுகள் என்பதை ஒரு கிளுகிளுப்பூட்டும் சமாசாரமாகவே பார்த்து பழகிய நமக்கு இப்போது நடைமுறையிலுள்ள அறிவியல் ரீதியான உதட்டு ஆராய்ச்சி புதுமையானதாக தெரிகிறது.
கைரேகைகள் மாதிரி மிகமுக்கியமான அடையாளம் உதட்டுரேகைகள்.அவற்றை வைத்து குற்றவாளிகளை இலகுவாக அடையாளம் காணமுடியுமென்பது ஜப்பானியர்கள் நெடுநாள் ஆராய்ச்சியில் கண்ட முடிவாகும்.இது தொடர்பில் மேலும் தமது உதட்டு ஆராய்ச்சிகளின் மூலம் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் தமிழகத்தின் தடயவியல் துறையின் இயக்குனராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் பி.சந்திரசேகரன்.
உதடுகளின் ரேகைகளை விட அவற்றின் வடிவமும் அளவும் முக்கியமானவை.அவை சாமானியரால் சுலபமாக கண்டறியக் கூடியவையும் கூட என்று உதடுகளின் வகைகளையும் விதங்களையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து போட்டு விளக்குகிறது சமீபத்தில் வெளியான உதடு தடயவியல் என்ற சந்திரசேகரனின் ஆய்வுநூல்.
முன்பு ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கு விசாரணையில் துப்புத்துலங்குவதில் முக்கியமாயிருந்து செயற்பட்டவர் இவர்புகைப்படக் கலையில் நவீன கிராபிக்ஸ் வேலைகள் மூலம் நடந்த போலியான சட்டவிரோத காட்சிபடுத்தல்களில் அவற்றில் சிறிதும் சம்பந்தமில்லாத சிலர் சிக்கி தண்டனை பெறவிருந்த சந்தர்ப்பங்களில் தமதுஆய்வுகளின்மூலம் அவற்றின்அசல் வேறு நகல்வேறு என நீதிமன்றங்களில் அத்தாட்சிபூர்வமாக நிரூபித்து அற்த அப்பாவிகளை கண்டனையிலிருந்து தப்பவும்வைத்்தவர்.அப்படிப்பட்ட நிபுணர் உதட்டு ஆராய்விலும் இறங்கினால் அதை பார்த்துகு் கொண்டு ஊடகங்கள் வாளாவிருக்குமா ஹிந்து நாளிதழ் அன்னாரிடம் நடத்திய நேர்காணலி்ன்போது அவர் சொன்ன தகவல்களை இப்போது உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
உதட்டை பற்றி ஓர் உண்மையுண்டு.அதாவது பேசுகிறவன் தன் பேச்சை கேட்பவனின் கண்களை பார்த்து தான் பேசுவான் அதேசமயம் அப்பேச்சைகேட்பவன் பேசுபவனின் உதட்டை பார்ப்பான்.இவ்வாறு பேசுபவனின் உதடுகளை கவனிக்கும் ஒருவன் பின்னர் அந்நபரின் உதடுகளை வைத்தே அவனை அடையாளம் காட்டிவிட முடியும்.
குற்றவாளிகளையும் இந்த முறைப்படி அடையாளம் காணமுடியும் என்பதால்தான் இந்த ஆய்வினை மேற்கொண்டேன்.இதற்காக காஷ்மீர் தொடக்கம் கன்னியாகுமரி வரை சென்று 2063 நபர்களின் உதடுகளை புகைப்படம் எடுத்தேன்.அதில் 106 குழந்தைகளின் உதடுகளும் அடங்கும்.இதில் கிட்டத்தட்ட 500பேர் வரை சில வருட கால இடைவௌி விட்டு மீண்டும் படமெடுத்தேன்.அப்படி இடைவௌிவிட்டு படமெடுக்கப்பட்ட உதட்டுரேகைகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளதை இதன்மூலம் கண்டுபிடித்தேன்.கைரேகைகள் போல இல்லை.
உதட்டுரேகைகள் காலப்போக்கில் மாற்றம் கண்டுவிடுகின்றன.முகத்தில் கண்காது மூக்கை விட அதிகம் உணர்ச்சியுள்ளவையும் அசையும் தன்மை கொண்டவையும் உதடுகள் தான்.முகுத்தின் மற்ற பாகங்களை விட உதடுகளின் வடிவங்களும் குறைவானவைதான். இதனால் மனிதரின் உதடுகளை பார்த்து ஞாபகம் வைத்துக் கொள்வது சுலபம். சிலருக்கு இரு உதடுகளுமே தடித்திருக்கும். சிலருக்கு இரண்டுமே மெல்லியதாய் இருக்கும் சிலருக்கு மேல்உதடு தடித்திருக்க கீழ் உதடு மெலிவாக அமைந்திருக்கும். சிலருக்கு மேலுதடு மெல்லியதாக இருக்க கீழ் உதடு தடித்திருக்கும் தடிப்பைப் பொறுத்தவரை இப்படி உதடுகளை நான்கு வகைகளாக பிரிக்கலாம்.
அடுத்து உதடுகளின் கோடுகளை வைத்தும் அடையாளம் காணலாம் மூடியிருக்கும் உதடுகளில் மூன்று கோடுகள் தென்படும்.முதல் கோடு எதுவென்றால் இரு உதடுகளும் மூடிய நிலையில் நடுவில் தெரியும் நடுக்கோடாகும்.அடுத்து மேலுதட்டின்ஓரமாக இருக்கும் மேல்கோடு. இறுதியாக கீழுதட்டின் எல்லையாக இருக்கும் கீழ்க்கோடு. இம்மூன்று கோடுகளும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வடிவமுடையதாக இருக்கும் இந்த வடிவங்கள் பலவகைகளாக இருப்பதுகண்கூடு.
உதாரணமாக நடுக்கோடுகளில் நேராக இருப்பது மேல் வளைந்தது கீழ் வளைந்தது.அலைபோல்வளைந்து காணப்படுவது முன் பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்த நிலையில் கோடில்லாமல் இருப்பது கொஞ்சம் திறந்து கொஞ்சம் மூடியிருப்பது. ஆங்காங்கே ஒட்டிப் பிரிந்திருப்பது சுருக்கங்களை கொண்டிருப்பது என்பது போன்ற பத்து வகைகள் உள்ளன.
மேல்கோட்டை எடுத்துக் கொண்டால்சமமான இரட்டை கோபுரம் போல தோன்றுபவை சமமில்லாத இரட்டைக்.கோபுரங்களைப் போல காணப்படுபவை வளைவாகச் சென்று நடுவில் சமமாக இருப்பவை வண்ணத்துப்பூச்சிபோல சிறகு விரித்துகாணப்படுபவை என்பவை போன்ற பன்னிரு வகைகள் உண்டு.அதேசமயம் கீழ்க்கோட்டை பொறுத்தவரை ஆப்பிள் பழத்தின் அடிப்பாகம் போன்று தோற்றம் காட்டுபவை.ஒருவட்டத்தின் நாளிலொரு பாகம் போல சிறிதாகவும் அரைவட்டம் போல பெரிதாகவும் காணப்படுபவையென்று ஆறுவகையுண்டு.
இதில் எந்தவகையான உதடுகள் குற்றவாளிக்கு இருந்தது என்றுபொது மக்களுக்குச் சொல்லத் தெரியாது.ஆனால் நாம் உதடுகளின் மாதிரி புகைப்படங்களை காட்டினால் இதுதான் என்று அடையாளம் காட்டமுடியும்.பொதுவாக ஒரு குற்றத்தின் போது எல்லோரையும் சந்தேகப்பட முடியாது.சந்தேக வலைவிரிப்புக்குள் அடக்கும் சில நபர்களில் யார் குற்றவாளியென்று கண்டுபிடிக்க இந்த உதட்டு ஆராய்ச்சி உதவும்.
அதே கண்கள் என்ற அந்த நாளைய திரைப்படத்தில் கண்களை மட்டும் உற்றுப்பார்த்து அந்த கண்ணளுக்கு சொந்தகாரர் தான் குற்றவாளியென்று கண்டுபிடிப்பார்கள்.அதேபோல அதே உதடுகள் என்று நம் பொலிஸ்காரர்கள் குற்றவாளியை கண்டுபிடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று அடித்துக் கூறுகிறார் சந்திரசேகரன்.
நடிகையரின் பவளம்போன்று சிறந்த ஆதாரங்களை பிரசுரித்து இது யாருடைய உதடு என்று வாசகர்களிடம் கேட்பது நமது பத்திரிகைகளின் பழைய உத்தி.ஆனாலும் புதிதான இன்றைய உதட்டு ஆராய்ச்சிகளுக்கு அதுதான் ஓர்ஆரம்ப புள்ளியாக இருந்திருக்கலாமென்று எண்ணத் தோன்றுகிறது.
Average Rating