கத்தி’ பட பாணியில் இந்தியாவின் அரியானாவில் போராட்டம் ..!!

Read Time:2 Minute, 2 Second

45656டெல்லிக்கு வர வேண்டிய தண்ணீர் தடையில்லாமல் வந்து சேருவதை அரியானா அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

அரியானாவில் ஜாட் இன மக்கள் இட ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியானாவில் இருந்து டெல்லிக்கு செல்லும் முனாக் கால்வாயை ஜாட் இன மக்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

மேலும் கால்வாயின் மதகுகளை அடைத்து தண்ணீர் வெளியேறாதபடி செய்துள்ளதால் டெல்லியில் தண்ணீருக்கு கடும் கட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

இந்நிலையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணக்கோரி டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தது.

இதனை தொடர்ந்து மத்திய அரசு டெல்லிக்கு கிடைக்க வேண்டிய நீர் எந்தவித பாதிப்பின்றி கிடைக்க அரியானா அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று அரியானா அரசிடம் மத்திய அரசு கூறியுள்ளது.

ஜாட் இனமக்கள் நடத்தி வரும் போராட்டத்தால் அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருங்கல்லால் தாக்கப்பட்டு கணவன் கொலை – சந்தேகத்தின் பேரில் மனைவி கைது..!!
Next post பீஜி அனர்த்த சேதவிபரங்கள் சேகரிப்பு..!!