திருமண பந்தத்தில் இணையும் 3000 ஜோடிகள் ; 62 நாடுகளில் இருந்து…!!

Read Time:1 Minute, 40 Second

sdffdதென் கொரியாவில் உள்ள ஒருங்கிணைந்த கிறிஸ்தவ ஆலயம் சார்பில் சன் மியுங் மூன் நினைவாக நடத்தப்பட்ட திருமண நிகழ்ச்சியில் ஏராளமான ஜோடிகள் திருமணம் செய்துக் கொண்டனர்.

சுமார் 62 நாடுகளில் இருந்து வந்த 3000 இளம் ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்தது. < மேலும் இந்த திருமண நிகழ்ச்சியில் இணையதளம் மூலம் சுமார் 12, 000 ஜோடிகள் கலந்துக் கொண்டனர். கடந்த 1960ஆம் ஆண்டு முதல் மூன் இந்த திருமண நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு மூன் மறைந்ததையடுத்து அவரது மனைவி ஹக் ஜா ஹன் மூன் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த திருமண நிகழ்ச்சியில் சுமார் 1, 000 புதுமண தம்பதிகளும், 2000க்கும் மேற்பட்ட திருமணமான தம்பதிகளும் பங்கேற்றனர். திருமணமான தம்பதிகள் தங்களது மணவாழ்க்கையை கடவுள் சன்னதியில் புதுபிக்கும் நோக்கில் கலந்துக் கொள்வது வழக்கம். அப்பகுதியில் நடத்தப்படும் இந்த பெரு நிகழ்ச்சி அனைவரிடமும் வரவேற்பை பெற்று வருவதுடன், ஏராளமான தம்பதிகள் மகிழ்ச்சியான வாழ்வை துவங்குவதாக கருத்து தெரிவித்துள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸிகா வைரஸ் தொற்று அபா­யத்­தி­லுள்ள பெண்கள் கருத்­தடை செய்து கொள்­வ­தற்கு ஆத­ர­வாக கருத்து…!!
Next post திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவில் எலி…!!