வேற்றுகிரகவாசிகளை கண்காணிக்க மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கும் சீனா: 9 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்…!!

Read Time:1 Minute, 59 Second

9ca49c49-2001-4a71-ac8b-6a54af556711_S_secvpfபிரபஞ்சத்தில் புத்திக்கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளின் நடமாட்டத்தை கண்டறிய உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை அமைக்க சீனா திட்டமிட்டு உள்ளது. தென்மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில் இந்த தொலைநோக்கியை அமைக்கப்படவுள்ளது.

500 மீட்டர் பரப்பளவுடன் 30 டன் எடைகொண்ட இந்த தொலைநோக்கியில் 34 அடிநீளம் கொண்ட தகடுகள் அமைப்படும். பிரபஞ்சத்தில் நடைபெறும் காட்சிகள் இந்த தகடுகளில் பட்டு பிரதிபலிப்புடன் பதிவாகும். இந்த காட்சிகளை வைத்து வேற்று கிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தொலைநோக்கியை அமைப்பது தொடர்பாக 20 ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
தற்போது, 1.2 பில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் 1264 கோடி ரூபாய்) செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த தொலைநோக்கி செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொலைநோக்கியை அமைப்பதற்காக அப்பகுதியில் வசிக்கும் சுமார் 9 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்கு இழப்பீடாக 10 ஆயிரம் யுவான்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய்) வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியாழன் போன்று 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு..!!
Next post இலங்கையர் சிங்கபூரில் கைது…!!