எம்பிலிபிட்டிய சம்பவம் – உயிரிழப்பிற்கான காரணத்தை நீதிபதி கூறினார்…!!

Read Time:2 Minute, 0 Second

99368121embiliஎம்பிலிபிட்டிய பொலிஸாருடனான மோதலில் உயிரிழந்த சுமித் பிரசன்ன ஜயவர்தனவின் உயிரிழப்பிற்கு வெட்டு, கீறல்களுடனான காயத்துடன் நாடி நரம்புகளில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டமையினால் அதிக இரத்த வௌியேற்றம் மற்றும் அதிர்ச்சியே காரணம் என்று உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக மரண விசாரணைகள் மேற்கொண்டு எம்பிலிபிட்டிய மேலதிக நீதவான் பிரசன்ன பெர்ணாந்தோ இன்று (19) இதனை தெரிவித்ததாக சட்டத்தரணி உதுல் பிரேமரட்ன தெரிவித்தார்.

அதன்படி விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இரகசியப் பொலிசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் 04ம் திகதி எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது ஒரு பிள்ளையின் தந்தையான சுமித் பிரசன்ன ஜயவர்தன என்பவர் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும் இவரின் மரணம் குறித்து இன்று நீதிபதியினால் தெரிவிக்கப்பட்டதானது, மரண விசாரணை அறிக்கை மூலமான மரணத்திற்கான காரணம் மட்டுமே என்று சட்டத்தரணி உதுல் பிரேமரட்ன தெரிவத்ததுடன், இந்த மரணம் நிகழ்ந்தது எவ்வாறு? அது கொலையா இல்லையா என்று குறிப்பிடப்படவில்லை என கூறினார்.

அதன்படி மரணம் எவ்வாறு நிகழ்ந்தது எவ்வாறு என்று அடுத்த கட்ட விசாரணைகளில் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்…!!
Next post உறவில் ஆண், பெண் வயது வித்தியாசம் சரியா? தவறா?