லெபனானின் முக்கிய நகரை இஸ்ரேல் படை சுற்றி வளைத்தது

Read Time:2 Minute, 33 Second

Lepanan.Map1.jpgலெபானின் முக்கிய நகரை இஸ்ரேல் தரைப்படை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் வீரர்கள் 2 பேரை லெபானின் ஹிஸ்புல்லா இயக் கத்தினர் கடத்திச் சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று 14-வது நாளாக இந்த தாக்குதல் நீடித்தது. இந்த குண்டு வீச்சில் பெய்ரூட் விமான நிலையம், முக்கிய சாலைகள், மின்சார நிலையங்கள், டெலிவிஷன் கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. 700-க்கும் மேற்பட்டவர்கள் இருதரப்பிலும் பலியாகி விட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பொது மக்கள்.

விமானத் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் ராணு வம் இப்போது தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தி இருக்கிறது. லெபனானின் எல்லை பகுதிகளை கடந்து பல மைல் தூரம் இஸ்ரேலின் பீரங்கி டாங்கி படைகள் ஊடுருவிச் சென்றன.

லெபனானின் முக்கிய நகரான பின்ட் ஜிபாயில் இஸ்ரேலின் தரைப்படை சுற்றி வளைத்தது. இந்த நகரம் லெபனானி ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் கோட்டையாக திகழ்ந்து வந்தது. சக்திவாய்ந்த குண்டுகளை இஸ்ரேல் படை வீசியதில் அந்த நகரம் தீப்பிடித்து எரி கிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்க வீரர்கள் பலர் பலியாகி விட்டனர்.

ஏற்கனவே மரூன் அல்ராஸ் நகரை இஸ்ரேல் படை கைப் பற்றி விட்டது. இது எல்லையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் 9 இஸ்ரேல் வீரர்கள் காயம் அடைந்தனர்.

இஸ்ரேல் தாக்குதலில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்து தவிக்கி றார்கள். இவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ ரூ. 700 கோடி நிதி உதவி அளிக்க ஐ.நா. முடிவு செய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி: முதல் கட்ட ஓட்டுப்பதிவில் இந்திய அதிகாரிக்கு 2-வது இடம்
Next post “சுவிஸ் பொங்கியெழும் மக்கள் படை”யினரின் தகவல்களும் வேண்டுகோளும்…