மொட்டைக்கடிதம், நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் தியாகராசா மன்னிப்பு கடிதம்?.. நடந்தது என்ன?..!!
வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிற்கு எதிராக கடந்த 45 ஆவது மாகாண சபை அமர்வில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தற்போது வலுவிழந்து வருகின்றது.
இதன் பிரகாரம் அமைச்சருக்கு எதிராக அக்கணம் போர்க்கொடி தூக்கிய அக் குழுவின் முக்கிய உறுப்பினர் வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா மன்னிப்பு கோரி கடிதம் ஒன்றினை தற்போது அனுப்பியுள்ளாரீன தெரிய வருகிறது.
இக்கடிதத்தில் “தான் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் விவசாய அமைச்சர் மீது தான் தெரிவித்த அத்தனை கருத்துக்களையும் வாபஸ் வாங்குவதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இக்கடிதத்தின் இறுதியில் “அண்மைக்காலமாக முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரனை எனும் பெயரில் மொட்டைக்கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில் தான் கையொப்பமிட்டது தவறு” என அதில் சுட்டிக் காட்டியுள்ளார்.
அவ்வகையில் மன்னிப்பு கோரும் கடிதத்தின் பிரதிகளை முதலமைச்சர், விவசாய அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமசந்திரன் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.
விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசனிற்கு எதிராக பதினொரு அம்ச குற்றச்சாட்டுக்களினை முன்வைத்து கடந்த மாகாண சபை அமர்வில் முதலமைச்சரினை விசாரணை செய்யக் கோரும் பிரேரணை கொண்டு வரப்பட்டு அது ஏகமனதாக நிறைவேற்றப் பட்டிருந்தது.
இந்நிலையினில் தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிற்கு அமைச்சர் திணறினாலும் தற்போது ஆதரவாக மன்னிப்பு கடிதம் கிடைத்தமை அவருக்கு ஒரு உந்துதலை அழித்துள்ளது என்றெ கூறலாம்.
இதனால் எதிர்வரும் 25ம் திகதிய கூடவுள்ள அமர்வின் போது அமைச்சர் பொ.ஜங்கரநேசனிற்கு ஆதரவாக பிரேரணையொன்றை கொண்டுவர கடும்பிரயத்தனங்கள் முடக்கி விடப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
அடுத்து மற்றுமொரு உறுப்பினரான ஜி.ரி.லிங்கநாதனும், விவசாய அமைச்சருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாக அறிய முடிந்தது. எனினும் தேவையானஅளவு தனக்கு ஆதரவு உள்ளதனால் விவசாய அமைச்சர் அதனை வழிவிட்டுள்ளார்.
இவ்விரு உறுப்பினர்களும் வட மாகாணத்தில் விவசாய அமைச்சர் மீது நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டு வர முயற்சித்த நிலையில் ,தனியார் விடுதி ஒன்றில் ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்தி அடுக்கடுக்காக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தனது பெற்றோலிய நிரப்பு நிலையத்தினை பொறுப்பேற்குமாறு கோரி விவசாய அமைச்சருக்கு எடுத்துக் கூறிய நிலையில் அவர் அதை மறுத்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் மீது எடுக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனை விடயத்திற்கு துணைபோனதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்து வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததன் நோக்கம் அவரது செயல்திறனை வலுவிழக்க செய்வதாகும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக ஊடகவியலாளர்கள் எல்லோரதும் பேராதரவை பெற்று தனது கடமைகளை செய்வதாக ஒருதரப்பு கூறினாலும், மற்றுமொரு தரப்பு அதிக செலவுகளை செய்வதாகவும் சிலவேளை அவரே சூழலை அசுத்தம் செய்யும் நடவடிக்கைக்கு துணைநிற்பதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதற்கு தற்போது நடைமுறையிலும் எதிர்காலத்திலும் நடைமுறைப் படுத்தப்படவுள்ள இரணைமடு நீர்பாசனத் திட்டம் தொடர்பிலான செயற்பாடுகள், பாதீனிய ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள், பளைப் பிரதேசத்தில் நிறுவப்பட்ட காற்றாலை தொடர்பிலான விடயம், சுன்னாக நிலத்தடி நீர் தொடர்பிலான செயற்பாடுகள், மருதங்கேணி கடல்நீரை நன்னீர் ஆக்கும் செயற்பாடு, கார்த்திகை மர நடுகை, அனர்த்த நிவாரண விநியோகம், உழவர் திருநாள் மலர்க்கண்காட்சி, விவசாய தினம், மண் தினம் போன்றவையில் உள்ள குறைபாடுகள் அத்துடன் அமைச்சரின் பதிலளிக்க வேண்டிய இடத்தில் அமைதி காப்பது போன்ற இன்னோரன்ன நடவடிக்கையினால் தான் இவ்வாறான நம்பிக்கையில்லா பிரேரனையும்.உறுப்பினர்களின் போர்க்கொடி என்கின்ற விடயமும் எழுகின்றது எனலாம்.
இதற்கு முன்உதாரணமாக சுன்னாகம் நீர் பிரச்சினை விடயம், அடுத்தது பாத்தீனியம்.. இவ்விரண்டு விடயங்களும் என்ன நடந்தது? இதற்கு உரிய காலத்தில் உரிய பதில் மக்களை சென்றடைந்ததா? விவசாய அமைச்சர் பார்த்தாரா? இல்லவே இல்லை.. அமைச்சரிடமும் சில கடமையில் குறைகள் இருக்கின்றன. ஆனால் அதனை சொன்னால் போதும் அவர் அதை செய்வார்.இப்படி நடந்து கொண்டிருக்க வேணடிய அவசியம் கிடையாது.
மாவட்டங்கள் பறக்கணிக்கப்படுவது என்பது ஊடகங்களில் பார்த்தாலே உண்மை பலருக்கு விளங்கும். விவசாய அமைச்சருக்கு சகல இடங்களிற்கும் சென்று சேவையாற்ற பொறுப்பு உண்டு. அவர் அந்த இடத்திற்கு செல்வதற்கு முன்னர் அப்பகுதி பொறுப்பாளருக்கு அறிவித்தே அதன் பின் வருவார் ஆனால் குற்றச்சாட்டு முன்வைத்தவர்கள் மனச்சாட்சியை முன்நிறுத்தி வைக்கவில்லை. என்று கூற தோன்றுகின்றது.
எனவே தான் என்னவோ கடந்த மாகாண சபை அமர்வில் விவசாய அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள வட மாகாண சபை உறுப்பினர்களான ஆர்னோல்ட், சுகிர்தன், அஸ்மீன், சயந்தன், சர்வேஸ்வரன், லிங்கநாதன், சிவாஜிலிங்கம், தியாகராஜா உள்ளிட்டோரில் உறுப்பினர் தியாகராஜா மன்னிப்பு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார் என தோன்றுகின்றது..
அடுத்தது என்ன நடக்கும் என்பதை பொறுத்து நின்று தான் பார்க்க வேண்டும்….
Average Rating