பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் ‘மிஸ்ட் கோல்’ கும்பல்..!!
பெண்கள் எப்போதும் யாரையும் எளிதில் நம்பி விடக் கூடாது. மிக கவனமாக இருக்க வேண்டும். தனக்கு ஆறுதலாக இருப்பதாக நினைத்த ஒருவரிடம் வாழ்கையை தொலைத்து நிற்கிறார் ஒரு அபலை பெண்.
தமிழகத்தின் காஞ்சிரபுரத்தை சேர்ந்த குறித்த பெண்ணின் பெயர் சுஜி (பெயர் மாற்றம்). சிறுவயதிலேயே தந்தையை இழந்துள்ளார்.
இதனால் குடும்பத்தை சுமக்கும் பொறுப்பு சுஜியின் தாய், தம்பி மீது விழுந்தது. ‘பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்’ என்பதற்கு ஏற்ப சுஜியின் தம்பி விபத்தில் சிக்கி இறந்துவிட, குடும்பம் நிலைகுலைந்து போனது. இந்த கவலையில் சுஜியின் தாய் படுத்த படுக்கையாகி விட்டார்.
ஆதரவின்றி தவித்தார் சுஜி. அன்பான வார்த்தைக்கும், ஆறுதலான பேச்சுக்கும் ஏங்கியது அவரது மனம்.
சுஜியின் முழுக்கதையும் தெரிந்த விநாயகம் (பெயர் மாற்றம்), ‘உனக்கு வேலை வாங்கித் தருகிறேன்.
உன் வாழ்க்கைக்கு நான் பொறுப்பு’ என்று அறிமுகமாகிறார். இவர்களது நட்பு ஒரு மாதக் காலம் போனிலும், நேரிலும் தொடர்கிறது. ஆதரவின்றி தவித்த சுஜி, விநாயகத்தை முழுமையாக நம்புகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு, சுஜிக்கு விநாயகத்திடமிருந்து அழைப்பு. உடனே புறப்பட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வா என்று விநாயகம் சொல்ல சுஜியும் அங்கு செல்கிறார்.
அரக்கோணம் மின்சார ரயிலில் விநாயகமும், சுஜியும் பயணித்தனர். அரக்கோணத்தில் இறங்கிய அவர்களுடன் இன்னும் மூன்று பேர் அங்கு வந்து விநாயகத்துடன் கைகுலுக்கிறார்கள்.
அவர்களை தன்னுடைய நண்பர்கள் என்று சுஜியிடம் அறிமுகப்படுத்துகிறார் விநாயகம்.
ஒற்றையடிப்பாதையில் அவர்கள் செல்ல ஆட்கள் அரவமற்ற அந்த இடத்தை அவர்கள் அடைந்த போது சுஜிக்கு மனதில்திக் என்ற பயம் தொற்றிக் கொள்கிறது.
அதை விநாய கத்திடம் நேரிடையாக அவர் கேட்க, விநாயகத்தின் பார்வையும், பேச்சும் வேறு விதமாக இருப்பதை சுஜி உணர்கிறார்.
சீக்கிரம் இங்கிருந்து செல் வோம் என்று சுஜி அவசரப்படுத்த, விநாயகம் உனக்கு வேறு உலகத் தை காட்டப் போகிறோம் என்று சுஜியி டம் சொல்லி அத்து மீறுகிறார்.
சுஜியும் முடிந்த வரை அந்தக் காட்டில் அவர்களுடன் போராடி கடைசியில் தோற்றுப் போகிறார்.
பின்னர் விநாயகம், சுஜியிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு தன்னுடைய நண்பன் ரமேஷை அவருக்கு திருணம் செய்து வைக்கிறார்.
அந்த கசப்பான சம்பவத்தை மறந்து ரமேஷூம், சுஜியும் குடும்ப வாழ்கையை தொடங்க, பரிசாக ஆண் குழந்தை பிறந்தது. இதன் பின்னரும் விநாயகம் மீண்டும் சுஜியின் வாழ்க்கையில் விளையாடத் தொடங்குகிறார்.
இன்னொரு நண்பர் மனோ கருக்கு சுஜியை திரு மணம் செய்து வைக்க உறுதி அளித்த விநா யகம், அதற் கான ஏற்பாடு களை செய்ய. சுஜி, ரமேஷ் வாழ்க்கையில் விரிசல் ஏற்படுகிறது.
வாழ வழியின்றி தவித்த சுஜி, தன்னுடைய குழந்தையை ஆவடியில் ஒரு தம்பதியிடம் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார். தன்னு டைய வாழ்க்கையை அழித்த விநாயகத்துக்கு தக்க பாடம் புகட்ட நினைக்கிறார்.
பின்னர் தன்னைப் போல இன்னொரு அபலைப் பெண் ணுக்கு வேலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று விநாயகத்திடம் போனில் பேசிய சுஜி, மெரீனா கடற் கரைக்கு வர வழைக்கிறார்.
அங்கு வந்த விநாயகமும், மனோகரையும் கையும் களவுமாக பிடிக்கிறார். ஆனால் சுஜியிடமிருந்து அவர்கள் தப்பிச் செல்கின்றனர்.
மேலும் பல பெண்கள் விநாயகம் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பெண், “மிஸ்ட் கோல் கொடுத்து இளம்பெண்களிடம் பேசுவார்கள். நன்றாக பேசுபவர்களிடம் அவர்களின் முழுவிபரத்தை கேட்கும் அவர்கள் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்ப பின்னணி மற்றும் பிரச்சினைகளை தெரிந்து கொள்வார்கள்.
பிறகு உதவி செய்வது போல நடித்து அந்த பெண்ணின் வாழ்க்கையை கேள்விகுறியாக்கி விடுவார்கள். இவர்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் யாரும் தைரியமாக பொலிஸில் புகார் கொடுக்கவில்லை. இதனால் இந்த கும்பலின் அட்டூழியத்தால் பல பெண்கள் ஏமாந்து வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு நானே நல்லதொரு உதாரணம்” என கூறியுள்ளார்
Average Rating