புலியிடமிருந்து தப்புவதற்காக 2 மணித்தியாலங்கள் மரத்தின் மீது நின்ற சுற்றுலா பயணி..!!

Read Time:2 Minute, 48 Second

timthumb (2)நேபாளத்தில் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து பிரஜையொருவர், புலியிடமிருந்து தப்புவதற்காக தான் இரு மணித்தியாலங்களுக்கு மேல் மரமொன்றில் ஏறி நின்றதாக தெரிவித்துள்ளார்.

பொறியியலாளரான ஜரார்ட் வான் லார் (33) கடந்த ஒரு மாத காலமாக நேபாளத்தில் உல்லாசப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை, பார்தியா தேசிய பூங்காவில் தானும் நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென புலியொன்று அங்கு பீதியேற்படுத்தியதாக ஜெரார்ட் வான் லார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் பெரும் அதிஷ்டசாலி. இல்லாவிட்டால் எனது கதையை கூறுவதற்கு நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன்.

நானும் எனது பயண வழிகாட்டியான கிருஷ்ணாவும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென புலியொன்றின் உறுமல் சத்தம் கேட்டது. அப் புலி எமக்கு முன்னால் வந்தபோது நான் வேகமாக ஓடி மரமொன்றில் ஏறிக்கொண்டேன்.

புலியின் கவனத்தை திருப்புவதற்காக கிருஷ்ணா மற்றொரு திசையில் ஓடினார். ஆனால், அவரை புலி தாக்கி காயப்படுத்தியது. பின்னர் நான் இருந்த மரத்தின் அடிப்பகுதிக்கு திரும்பி வந்த புலி, அம் மரத்தை சுற்றிக்கொண்டிருந்தது.

அம் மரத்தில் தரையிலிருந்து 20 அடி உயரத்தில் நான் நின்றுகொண்டேன். 2 மணித்தியாலங்களின் பின் உதவியாளர்களுடன் கிருஷ்ணா அங்கு வந்தார். அவர்கள் புலியை விரட்டிய பின்னர் நான் மரத்திலிருந்தே இறங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர், பயண வழிகாட்டியான கிருஷ்ணா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேபாளத்தின் தென் மேற்குப் பகுதியிலுள்ள பார்தியா தேசிய பூங்காவில் சுமார் 70 புலிகள் வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு..!!
Next post பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் ‘மிஸ்ட் கோல்’ கும்பல்..!!