அஜித்தின் புதிய கெட்டப்…!!
அஜித்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர் தனது அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளில் தற்போது தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
சரித்திர பின்னணியில் உருவாகும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ள விஷ்ணுவர்தன், எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து அதற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த செய்தி ஏற்கெனவே உறுதியானதுதான்.
ஆனால், இந்த படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக ஒரு செய்தி அப்போது வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால், அது உறுதியான தகவலாக வெளிவரவில்லை.
இந்நிலையில், எழுத்தாளர் பாலகுமாரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்த படத்தில் அஜித் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறும்போது, ‘அஜித்குமாருக்காக கதை எழுதுவது உண்மைதான். ஆனால் தஞ்சை பெரியகோயில் பற்றிய கதையோ, ராஜராஜ சோழனைப் பற்றிய கதையோ அல்ல. ஆனால் ஒரு சோழ மன்னரைப் பற்றிய கதை என்பதை மட்டும் இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியும்‘ என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இதிலிருந்து, அஜித் சரித்திர பின்னணியில் விஷ்ணுவர்தன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. அஜித் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் முடிந்ததும், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating