போராட்டக்களத்தின் நடுவே, தலைவர்களின் காதல் பக்கங்கள்! (சிறப்புக் கட்டுரை)

Read Time:12 Minute, 39 Second

timthumb (1)போராட்டக்களத்தின் நடுவே தலைவர்களின் காதல் பக்கங்கள்!

காதல் என்ற வாழ்வியலின் ஓர் அழகிய உணர்வு. எல்லோரையும் வந்து தாக்கும் ‘அது’ உலகின் தலை சிறந்த தலைவர்களையும், புரட்சியாளர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. இவர்கள் அதனை தன்னுடைய விடுதலைப் போராட்டத்துடன் இணைத்தே கொண்டு போயினர். போராட்டக்களத்தின் நடுவே தொடர்ந்தது இவர்களது காதல்!

ஜென்னி – மார்க்ஸ்

ஜென்னி ஒரு செல்வந்தர் வீட்டு குழந்தை. அவளது இரண்டு வயதில் அவளது தந்தைக்கு பணி மாறுதல் பெற்று ஸ்ட்ரீவ்ஸ் பகுதிக்கு வந்தனர். ஜென்னியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஹேய்ன்ரிச் மார்க்ஸ். வக்கீல் தொழில் செய்பவர். ஜென்னிக்கு நான்கு வயது இருக்கும் போது 1818 ம் ஆண்டு மே 5ம் தேதி ஹேய்ன்ரிச் மார்க்ஸுக்கு ஒரு மகன் பிறந்தான். அவர் தான் உலகின் மிக முக்கிய தத்துவக் கோட்பாட்டு தந்தை கார்ல் மாக்ஸ். மார்க்சும் ஜென்னியும் சிறு வயது முதலே ஒன்றாகவே இருந்தனர். பதினேழு வயதில் கார்ல்லுக்கும் ஜென்னிக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஆனால், இதனை அறிந்த கார்ல் மார்க்சின் தந்தை எங்கே தனக்கும் ஜென்னிக்கும் இடையிலான நட்பு பறிபோய்விடும் என்று பயந்தார்.

மார்க்ஸ் பெர்லினுக்கு தனது மேற்படிப்புக்காக சென்ற போதும் பல அறிவுரைக் கடிதங்கள் தந்தையிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தது. ஆனால், ஜென்னி – மார்க்சின் காதல் யாரும் எட்ட முடியாத இடத்தில் பறந்து கொண்டு இருந்தது. ஜென்னி மார்க்சை கரம் பிடிக்க ஏழு வருடம் காத்திருக்க வேண்டி இருந்தது. வீட்டில் இருந்து திருமணம் குறித்தான எல்லா கேள்விகளையும் தட்டிக் களித்தவாறு நாட்களை நகர்த்தினார் ஜென்னி. வேலை தேடினார் மார்க்ஸ். ஆனால், அவர் கையில் இருந்த உலக தத்துவங்களுக்கு இடையே அவருக்கு வேலை கிடைப்பது அவ்வளவு எளிதா? 1843ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு பாரிஸ் சென்றனர். அங்கு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிரான்சில் பல்வேறு கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டார் மார்க்ஸ்.

தொழிலாளர்களிடையே தொடர்ந்து பேசினார். அவரது கோட்பாடுகளை ஜென்னியிடம் விளக்குவார். அவ்வளவு வறுமையிலும் வறுமை பழகா ஜென்னி தனது காதலனுடன் சந்தோஷமாக இருந்தாள். ஆனால், வருமானம் இல்லா காலகட்டத்தில் ஒரு குழந்தையுடன் எப்படி காலம் தள்ளினாரோ ஜென்னி! மார்க்ஸ் பிரான்சை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டார். அங்கிருந்து பெல்ஜியம் சென்றார். ஒரு நாள் அவர் சிலருடன் முக்கிய விவாதத்தில் இருக்கும் போது காவல்துறையால் சிறைபிடிக்கப்பட்டார். ஜென்னி பதறினாள். சிலரைச் சந்தித்து தன் காதலனை எப்படியாவது வெளியே கொண்டு வர விரும்பினாள்.

உண்மையில் அவளால் அவரை பிரிந்து இருக்க முடியவில்லை. கடைசியில் அவளையும் சிறைபிடித்தனர். பல்வேறு மக்களின் போராட்டங்களுக்குப் பின்னர் அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் வெளியேற்றப்பட்டனர். பாரிஸ் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஜெர்மனிக்கு சென்றனர். மீண்டும் பிரான்சுக்கு போனார்கள். மீண்டும் நாட்டினை விட்டு வெளியேற உத்தரவு. அப்பொழுது ஜென்னி கர்ப்பமாக இருந்ததால் அவளுக்கு மட்டும் போராடி விளக்கு வாங்கினார் மார்க்ஸ். மார்க்சினை பல்வேறு இன்னல்களுக்கு இடையே லண்டன் அனுப்பினால் ஜென்னி. ஜென்னி லண்டனுக்கு சென்ற பொது அவளை இன்னும் வறுமை வாட்டியது. குளிரும் வாட்டியது. வீட்டிற்கு அவர்களால் வாடகை கூட கொடுக்க முடியவில்லை.

பல நேரங்களில் யாராவது வீட்டு வாடகை தருவார்கள். ஒரு வேலை சாப்பாடு கிடையாது. ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு சுகாதாரமற்ற பகுதிக்கு குடியேறினர். தொடர்ந்து அவர்களது சிறிய குழந்தை அடுத்தடுத்து இறந்து போனது. அதனை அவள் இவ்வாறு குறிப்பிடுகிறாள் “குழந்தை பிறந்த போது தொட்டில் வாங்க பணமில்லை; அவன் இறந்த போது சவப்பெட்டி வாங்க பணமில்லை”. வேறு ஒருவர் பணம் தர அந்தக் குழந்தையை புதைத்தனர். 1881ம் ஆண்டு டிசம்பர் 2 இல் ஜென்னி கார்ல் மார்க்சிடம் இருந்து பிரிந்தாள். இத்தனை கஷ்டங்களுக்கு இடையேயும் அவள் மார்க்சை நேசித்தாள். அவரும் அவளை நேசித்தார். அவர்கள் காதலர்கள்!

சே – ஹில்டா

இந்த உலகை ரசிக்கும் ஆசையுடன் சே சுற்றி திரிந்த காலத்தில் பல்வேறு லத்தின் அமெரிக்க நாடுகளுக்குச் சென்றார். அப்போது தான் பெருவிற்கு செல்லும் போது குவாதிமாலாவில் ஹில்டாவைச் சந்தித்தார். ஹில்டாவும் பல்வேறு புரட்சிகர வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். பல்வேறு நாடுகளை சுற்றித் திறந்திருந்தார். இருவரும் ஒத்த கொள்கையாலும், ஒத்த போராட்டத்தாலும் இணைந்தனர். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது! பிறகு திருமணமும் செய்து கொண்டனர்.

பெரியார் – நாகம்மை

பெரியார் – நாகம்மை இருவருக்குமான திருமணம் காதல் திருமணம் இல்லை என்றாலும் பெரியார் நாகம்மை மீது கொண்ட காதலுக்கு ஒன்றை எடுத்துக்காட்டாக சொல்லலாம். பெரியார் பலருக்கும் எழுதிய இரங்கல் கடிதங்களை தொகுக்கும் பணியில் வே. ஆனைமுத்து போன்றோர் ஈடுபடும் வேளையில் அதில் நாகம்மைக்கு பெரியார் எழுதிய இரங்கல் விடுபட்டிருந்தது. அதனை பெரியார் சுட்டிக்காட்டி அதையும் சேர்க்கலாமே என்று கூற அடுத்த நாளே அந்த இரங்கல் கடிதத்தை தேடி எடுத்துச் சென்றிருக்கிறார் ஆனைமுத்து.

முதல் வரியை அவர் படிக்க அடுத்த வரியில் இருந்து “நாகம்மை இறந்துபோனதை ஒரு துணை போயிற்று என்று சொல்வேனா? ஓர் அமைச்சு போயிற்று என்று சொல்வேனா? ஓர் அடிமை போயிற்று என்று சொல்வேனா? எல்லாம் போயிற்று என்று சொல்வேனா?.. என்று அந்த கடிதத்தில் இருந்ததை அப்படியே கூறி ஒரு குழந்தை போல தேம்பி அழ ஆரம்பித்திருக்கிறார்.

நாகம்மை இறந்த வருடம் 1933ல். இந்த நிகழ்வு நடந்தது 1973ல். ஏறத்தாழ நாகம்மை இறந்து நாற்பது ஆண்டு காலம் கழித்தும் அவர் நாகம்மைக்கு எழுதிய இரங்கல் கடிதத்தை நியாபகம் வைத்து அழுதது என்பது அவரது நாகம்மையின் மீதான காதலை நமக்கு கூறுகிறது.

பிரபாகரன் – மதிவதனி

1983 ல் நடைபெற்ற ஜூலை படுகொலையைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் மக்கள் தென்னிலங்கையில் இருந்து வடகிழக்கு நோக்கி இடம் பெயர்ந்தனர். அதில் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களும் இருந்தனர். யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் வகையில் மாற்றுச் சான்றிதழை தருமாறு இடம்பெயர்ந்த மாணவர்கள் கேட்க அதனை அரசு நிராகரித்து மாணவர்களை மீண்டும் தான் பயின்ற பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.

அந்த சமயத்தில் தான் விடுதலைப்புலிகள் சார்பில் ‘கொலைக்களத்துக்கு போக வேண்டாம்’ என்று ஒரு துண்டு பிரசூரத்தை வெளியிட்டனர். மாணவர்களிடையே மிகப்பெரிய போராட்டம் வெடிக்க நேரிடும் என்று கருதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மூடப்பட, நான்கு மாணவிகள் உட்பட ஒன்பது மாணவர்கள் ஜனவரி 9 1984ல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினர்.

ஆனால், ஜெயவர்தனே அரசு மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஜனவரி 16ம் தேதி மாணவர்களை சோதித்த மருத்துவர், ஒரு மாணவியின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்தார்.

அன்று இரவே மாணவர்கள் காணாமல் போக, மாணவர்களின் உண்ணாநிலை புலிகள் பாசறையில் முடிக்கப்பெற்று, ஒன்பது மாணவர்களும் படகு மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது தெரியவந்தது.

“அரசுக்கு அமைதிவழி போராட்டம் காதில் கேட்காது. மாணவர்களின் உயிர் போகக்கூடாது. மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்” என்பதாக புலிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படி படகின் மூலம் தமிழகம் கொண்டு செல்லப்பட்ட மாணவர்களில் ஒருவர் தான் மதிவதனி.

சென்னையில் தங்க வைப்பட்டிருந்த மதிவதனி, ஹோலிப் பண்டிகையின் போது பிரபாகரன் மீது கலர் நீரை ஊற்ற, அதற்கு பிரபாகரன் கடிந்து கொள்ள, மதிவதனி ஒரே அழுகை. அன்டன் பாலசிங்கத்துடன் பேசிவிட்டு செல்லும் போது சமாதானப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார்.

இருவருக்குமான காதல் மறந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து மதிவதனியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர்.

அக்டோபர் 1ம் தேதி 1984ல் அவர்களது திருமணம் நடைபெற்றது. மதிவதனி மற்றும் பிரபாகரனின் உடல் வேறாயினும் உயிர் ஒன்றாகவே இருந்திருந்தது. இருவரின் காதலும் போராட்டத்துடன் இணைந்து நின்றது. எல்லாவிதமான நெருக்கடியான காலகட்டத்திலும் கூட தலைவரின் மனைவி என்ற எந்த சலுகையும் இல்லாமல் தான் வாழ்ந்தார் மதிவதனி. போர்க்களத்திற்கு இடையிலும் அந்தக் காதல் மக்களுக்கான போராட்டத்துடன் இணைந்தே இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனவுகள் பலிக்குமா..!!
Next post குரங்கிடம் இருந்து தப்பிக்க மொட்டை மாடியில் ஓடிய பெண் கீழே விழுந்து பலி..!!