போர்ட்டோரிக்கோ அழகிக்கு உலக அழகி பட்டம்; இந்திய அழகி நேகா தோல்வி

Read Time:2 Minute, 32 Second

missUnivers.jpg55-வது மிஸ் யுனிவர்ஸ் உலக அழகி போட்டி அமெரிக் காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றுஇரவு நடைபெற்றது. இந்திய அழகி நேகா உள்பட 58 நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்திய அழகி நேகா இதில் வெற்றி பெற்று உலக அழகி பட்டத்தை வெல் வார் என்று பல்வேறு நிறு வனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவித்து இருந்தன.

நீச்சல் உடை, முகவெட்டு தோற்றம், போட்டோ ஜீனிக் உள்பட பல்வேறு பிரிவு களில் போட்டிகள் நடத்தப் பட்டு இறுதிச் சுற்றில் கலந்து கொள்ளும் அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிச் சுற்றுக்கு முந் தைய சுற்றில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த சுற்றுக்கு இந்திய அழகி நேகா முன்னேறினார்.

இந்த 20 அழகிகளில் இருந்து 10 அழகிகளை இறுதி சுற்றுக்கு தேந்தெடுக்கும் போட்டியில் நேகா வாய்ப்பை இழந்தார். `டாப்டென்’ வரிசையில் இடம் பெறாமலேயே நேகா ஏமாற்றத்துடன் திரும்பினார்.

தொடர்ந்து நடந்த இறுதி சுற்று போட்டியில் போர்ட்டோரிக்கோவை சேர்ந்த அழகி சுலேகா ரிவேரா மெண்டோசா `மிஸ் யுனி வர்ஸ்’ உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2-வது இடம் ஜப்பான் நாட்டு அழகிக்கும், 3-வது இடம் சுவிட்சர்லாந்து அழகிக்கும் கிடைத்தன.

`மிஸ் யுனிவர்ஸ்’ அழகி பட்டம் வென்ற ரிவேராவுக்கு கடந்த ஆண்டின் உலக அழகி நாதாலியா கிரீடம் சூட்டினார். இந்த கிரீடம் ரூ.1 கோடி மதிப்புள்ளது. 800-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த வைரங்கள் பதிக்கப்பட்டது.

உலக அழகி பட்டம் வென்ற சுலேகா ரிவேரா ஒரு ஆண்டு உலகம் முழுவதும் இலவசமாக சுற்றுப் பயணம் செய்வார். கோடிக்கணக்கில் இவருக்கு பரிசுத்தொகையும் அளிக்கப்படுகிறது.
missUnivers.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமைச்சரின் தொடர்பு அதிகாரி கொலை
Next post ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் 2 பேரை இஸ்ரேல் சிறைப்பிடித்தது