வடக்கு தமிழ் பேசும் மக்களின் மீள்குடியேற்றமும், அதன் அவசியமும்…!!

Read Time:4 Minute, 55 Second

timthumb (1)முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும் வடமாகண சபையும்(இலங்கை 68வது சுதந்திரதினத்தை கொண்டாடும் இந்நாளில் அகதி வாழ்விலிருந்து சுதந்திரம் அடையா ஓர் அகதியின் பேனா முனையிலிருந்து)

வடபுல முஸ்லிம்கள் 1990களில் விடுதலைப்புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு தம் சொந்த மண்ணை விட்டு வெளியேற்றப்பட்ட வரலாறு 25 வருடங்கள் கடந்தும் வார்த்தை கொண்டு அழைக்கப்படமுடியாத வரலாற்று துரோகமாகும்.

இவ்வாறு சில மணி நேரங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம்,அநுராதபுரம், குருநாகள், நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களில் “அகதி ” என்ற முத்திரை குத்தப்பட்டு அனுபவித்து வந்த துயர்கள் எண்ணிலடங்காதவை.

2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் வட புல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் அரசாங்கத்தின் கடைமையானது.

வடபுல முஸ்லிம்களும் தம் தாய்மண்ணின் மூச்சுக்காற்றை சுவாசிக்க எண்ணி மன்னார், முசலி, முல்லைதீவு, யாழ்பாணம் போன்ற பிரதேசங்களில் மீள்குடியேற சென்ற வேளை தமது சொந்த இருப்பிடம் சூரையாடப்பட்டிருந்த காட்சியைக்கண்டு கலங்கிப்போன இதயங்கள் தான் எத்தனை??

இவ்வாறான பின்னனியில் 2013 ல் வடமாகாணசபை தேர்தல் இடம்பெறுகிறது தமிழ்தேசியயக்கூட்டமைப்பு அதிகூடிய ஆசனங்களை கைப்பற்றி வடக்குவாழ் தமிழர்களின் ஏக கட்சியாக முடிசூடிக்கொள்ள வட புல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் வடமாகாணசபை யின் தார்மீக கடைமையாகிறது.

எனினும் முன்னைய சமூகம்(விடுதலைபப்புலிகள்) விட்ட தவறினை பின்னைய சமூகம் ( வடமாகாணசபையும் தமிழ்தலைமைகளும்) முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை உறுதி செய்வதன் மூலம் சரி செய்து கொள்ள இறைவன் சந்தர்ப்பத்தை வழங்கிய போதும் வடமாகாணசபை இந்த விடயத்தில் மௌனம் காப்பது ஏன்?

வட புல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக வடமாகாணசபைக்கு ஒரு பிரேரனையையாவது நிறைவேற்ற முடியாமல் போனதேன்? யாப்புத்திருத்தம் தொடர்பாக குழு ஒன்றை நியமிக்க முடிந்தளவிற்க்கு மீள்குடியேற்றம் தொடர்பான குழுவொன்றை நியமிக்க தறியமையேன்?

இறுதியுத்த முடிவில் அகதியாக்கப்பட்டு செட்டிகுள அகதி முகாமில் வாழ்ந்த ஈழத்தமிழர்களை மீள்குடியேற்றுவதில் ஒரு முஸ்லிம் அமைச்சர் மேற்கொண்ட பிரயத்தனத்தில் சிறிதளவாயினும் வடமாகாணசபை முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில் காட்டாதது ஏன்?

தமிழ்த்தலைமைகள் வன்னி முஸ்லிம் அமைச்சர் ஒருவர் மீதுள்ள கோபத்தை மீள்குடியேறவரும் அப்பாவி முஸ்லிம்கள் மீது காட்டுவதேன்? மாகாணசபை உறுப்பினர் ஒருவர்க்கு முல்லைத்தீவில் குடியேறும் முஸ்லிம்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல் இருக்கமுடியாததேன்?

ஆகவே யாப்பு மாற்றம்,தமிழர்க்கான நிரந்தர தீர்வு என பேசப்படுகின்ற இவ்நல்லாட்சியிலாவது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக சிறந்த கொள்கையினை வகுத்தது அதனை சபையில் நிறைவேற்றி நெடுங்கால அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியிடுவதன் மூலம் சிதைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் முஸ்லிம் உறவை மீளக்கட்டியெழுப்ப வழிசமைக்க வேண்டும் என்பதே இவ்வாக்கத்தை எழுதுகின்ற இவ் பேனாவின் எதிர்ப்பார்ப்பாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈபிஆர்எல்எப் கட்சிக்கு, அதிர்ச்சி கொடுத்த சிவமோகன் எம்.பி.. உண்மையில் நடந்தது என்ன…?
Next post மனைவியும் காதலியும் – எப்படி தெரியுமா…!!