ஐஸ்கிறீமைத் திருடிய சிறுவர்களுக்கு 8 வருடங்கள் கழித்து 13 வருட சிறை..!!

Read Time:3 Minute, 35 Second

timthumb (1)இரு இளை­ஞர்­க­ளுக்கு, 8 வரு­டங்களுக்கு முன்னர் அவர்கள் 14 வயது மற்றும் 15 வயது சிறு­வர்­க­ளாக இருந்த போது தமது வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவன் ஒரு­வ­னி­ட­மி­ருந்து ஐஸ்கிறீம் ஒன்­றையும் சூரி­ய­காந்தி விதை­க­ளையும் கள­வா­டிய குற்­றச்சாட் டில் தலா 13 வருட சிறைத் தண் டனை விதிக்­கப்­பட்ட சம்­பவம் துருக்கியில் இடம்­பெற்­றுள்­ளது.

மேற்­படி களவு தொடர்பில் பாதிக் கப்­பட்ட சிறுவன் முறைப்­பாடு செய்­யாத நிலையில் இந்தத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

லொல்கன் குத்லு (தற்­போது 22 வயது) மற்றும் ஒகன் சிப்ட்சி (தற்­போது 23 வயது) ஆகி­யோரே மேற்­படி குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளான இரு­வ­ரு­மாவர்.

குறிப்­பிட்ட திருட்டு சம்­ப­வத்­தை­ய­டுத்து இடம்­பெற்ற பல வரு­டகால விசா­ர­ணை­க­ளுக்கு மத்­தியில் அவர்கள் இரு­வரும் தமது பாட­சாலைக் கல்­வியைப் பூர்த்தி செய்து பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு தெரி­வா­கி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் குத்லு உயர் கல்­விக்­காக பல்­க­லைக்­க­ழக பரீட்­சை­யொன்­றுக்கு ஆஜ­ராக சென்ற வேளைஅங்கு வந்த பொலி­ஸாரால் கைதுசெய்­யப்­பட்டு இழுத்துச் செல்­லப்­பட்டுள் ளார். பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியைப் பெற்ற குத்லு தனக்­கான தண்­ட­னையை பிற்­போட கோரி­யி­ருந்­ததை அந்­நாட்டு நீதி­மன்றம் நிரா­க­ரித்­த­தை­ய­டுத்தே இந்தக் கைது இடம்­பெற்­றுள்­ளது.

இந்த சம்­ப­வத்தால் அந்த மாண­வர்­க­ளது பெற்­றோரும் சக மாண­வர்­களும் பல்கலைக்­க­ழக நிர்­வா­கமும் பெரும் அதிர்ச்சிக் குள்­ளா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தனது மகனை எவ்­வா­றா­யினும் பட்­ட­தா­ரி­யாக்க வேண்டும் என்ற கன­வுடன் வாழ்ந்து வந்த குத்­லுவின் தாயா­ரான ஹவ்வா சக்லம் இந்தக் கைதால் பெரிதும் மனம் உடைந்து போயுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கண­வ­ரின்றி தனித்து வாழும் அவர் தனது மருத்­து­வத்­தாதி தொழில் மூலம் கிடைத்த பணத்­தி­லேயே தனது மகனின் கல்விச் செலவை சமா­ளித்து வந்­துள்ளார்.

தண்­டனை என்­பது மீளவும் குறிப்­பிட்ட குற்­றச்­செ­யலை மேற்­கொள்­ளாது தடுப்­ப­தற்­காக வழங்கும் ஒன்­றெ­னவும் இந்­நி­லையில் விபரம் அறியாப் பருவத்தில் செய்த அற்ப குற்றச்செயல் ஒன்றுக்காக இத்தனை வருடங்கள் கழித்து நீண்ட சிறைத் தண்டனையை வழங் கியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் மனித உரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து வயோதிபர் பலி..!!
Next post யோசித்த உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!!