ஸ்டீவ் வோ பெரும் சுயநலவாதியான அணித்தலைவர் – முன்னாள் ஆஸி அணி வீரர் ஷேன் வோர்ன் குற்றம் சுமத்துகிறார்..!!
அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர்களில் ஒருவரான ஸ்டீவ் வோ, மிக சுயநலவாதி என அவுஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் விமர்சித்துள்ளார்.
ஸ்டீவ் வோவும் ஷேன் வோர்னும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிகளுக்கு பெரும் பங்காற்றியவர்கள்.
அவுஸ்திரேலியாவுக்கு உலக கிண்ணத்தையும் வென்றுகொடுத்த அணியிலும் இணைந்து விளையாடியவர்கள் இவர்கள். ஸ்டீவ் வோ அணித்தலைவராக இருந்தவேளையில் ஷேன் வோர்ன் உப தலைவராக இருந்தார்.
அப்போதெல்லாம் மைதானத்தில் ஸ்டீவ் வோவும் ஷேன் வோர்னும் நெருக்கமானவர்கள் போன்றே காணப்பட்டனர்.
ஆனால், தற்போது தனது முன்னாள் அணித்தலைவரான ஸ்டீவ் வோவை (50) கடுமையாக விமர்சித்துள்ளார் சுழற்பந்துவீச்சு நட்சத்திரமான ஷேன் வோர்ன்.
தற்போது, 46 வயதான ஷேன் வோர்ன் அவுஸ்திரேலிய செனல் 10 அலைவரிசையில் ஒளிபரப்பாகும் ‘ஐ ஏம் ஏ செலிபிரிட்டி, கெட் மீ அவ்ட் ஒவ் ஹியர்’ எனும் நிகழ்ச்சியில் பங்குபற்றுகிறார்.
இந் நிகழ்ச்சியில் பேசும்போது ஸ்டீவ் வோவை ஷேன் வோர்ன் விமர்சித்துள்ளார்.
‘எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் விளையாடிய அணிகளின் தலைவர்களில் மிகவும் சுயநலம் மிகுந்த அணித்தலைவர் ஸ்டீவ் வோ’ என வோர்ன் சாடியுள்ளார்.
1999 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்ற அவுஸ்திரேலிய குழாமிலிருந்து தான் இடையில் வெளியேறியமைக்கும் ஸ்டீவ் வோவுடனான மோதலே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அச் சுற்றுலாவில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளில் ஷேன் வோர்ன் வெறும் 2 விக்கெட்களையே வீழ்த்தியிருந்தார்.
சராசரியாக 134 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை அவர் வீழ்த்தினார். ஆனால், மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் மெக்கில் 31.43 எனும் சராசரியில் 7 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
3 போட்டிகள் முடிவில் மேற்கிந்திய அணி 2–1 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது. 4 ஆவது போட்டியில் ஷேன் வோர்னுக்குப் பதிலாக கொலின் மில்லர் சேர்க்கப்பட்டார்.
அப் போட்டியில் 176 ஓட்டங்களால் வென்ற அவுஸ்திரேலியா, ‘பிராங் வொரல் கிண்ணத்தை’ தக்கவைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத் தொடரில் ஷேன் வோர்னுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் இன்னும் மறக்கவில்லை. அதேவேளை, ஸ்டீவ் வோவை தான் வெறுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன என்கிறார் ஷேன் வோர்ன்.
‘டெஸ்ட் போட்டியிலிருந்து நான் நீக்கப்பட்டமை எனக்கு உண்மையில் சினமேற்படுத்தியது. 1999 ஆம் ஆண்டு (மேற்கிந்தியத் தீவில்) கடைசி போட்டியில் நாம் வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தோம்.
அந்த கட்டத்தில் அணித்தலைவர் (ஸ்டீவ் வோ) உபதலைவர் (வோர்ன்), பயிற்றுநர் (ஜொவ் மார்ஷ்) ஆகியோரே அணி வீரர்களை தெரிவுசெய்து வந்தனர்.
Average Rating