செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் இறந்தும் இயங்கிக்கொண்டிருக்கும் இதயம்
உலகிலேயே முதன் முறையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் மரணமடைந்துவிட்டார். ஆனால் அவரது இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2000 ஆம் ஆண்டில் பிரிட்டனில் பர்மிங்ஹாமிலுள்ள ஹவ்டன் என்பவருக்கு வைரஸ் காய்ச்சல் காரணமாக கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் ஒக்ஸ்போட்டிலுள்ள ஜோன் ரட்கிளிப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டொக்டர் ராபர்ட் ஜார்விக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை இதயம் இவருக்கு முதன்முறையாக வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. அச்செயற்கை இதயத்துடன் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்க்கையைத் தொடர்ந்தார் ஹவ்டன். மேலும், அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஹவ்டனால் தொடர்ந்து ஒரு மைல் தூரத்திற்கு அதிகமாக நடக்க முடிந்ததுடன் தனது அறக்கட்டளை நிறுவனத்தில் சுறுசுறுப்பாகப் பணியாற்றவும் முடிந்தது. அறக்கட்டளை சார்பில் 90 மைல் நடைப் பயணத்தில் பங்கேற்றதுடன் ஆல்ப்ஸ் மலையிலும் ஏறினார். இதய ஆராய்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு இடங்களுக்குச் சென்றதுடன் இரு புத்தகங்களையும் எழுதியதுடன் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதியும் திரட்டினார். செயற்கை இதயத்துக்கான மின்கலம் அதன் சேமிப்பு சக்தி குறையும் போதெல்லாம் மாற்றவேண்டி நேரிடும் அதன்போது மருத்துவமனையில் அவரிற்கு மாற்று மின்கலம் பொருத்தப்படும். கடந்த ஆண்டில் ஹவ்டனின் இதயம் 30 வீதம் நல்ல நிலைக்கு திரும்பிவிட்டதால் மின்கலம் மாற்றும் போதெல்லாம் அவர் இயல்பாகவே தனது வழமையான இதயத்துடிப்புடன் இருந்துள்ளார். செயற்கை இதயத்துடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்த ஹவ்டனின் 68 ஆவது வயதில் அவரது உடல் உறுப்புகள் பல செயலிழக்கவே மரணமடைந்துவிட்டார். ஆனாலும் அவரது செயற்கை இதயம் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றபடியால் மின்கலத்தை மருத்துவர்கள் நிறுத்தினால்தான் அவர் இறந்ததாக அறிவிக்க முடியும். ஹவ்டனின் மனைவி டியானோ, இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆனால் 11 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...