சரத்பொன்சேகா நாளை எம்.பி. யாக பதவியேற்பு…!!
ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார் என அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இதேவேளை இவருக்கு “படையினர் நலன்புரிகள் அமைச்சர் ” பதவி வழங்கப்படும் என்றும் அறியவருகிறது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி கடந்த மூன்றாம் திகதி புதன் கிழமை இணைந்து கொண்டது. இது தொடர்பான இரு தரப்புக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – சரத்பொன்சேகாவும் அலரிமாளிகையில் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் மறைந்த தேசியப் பட்டியல் எம்.பி.யான எம்.கே.டி. எஸ்.குணவர்தனவின் வெற்றிடத்திற்கு சரத்பொன்சேகாவை நியமிப்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை கூடவுள்ளதாவும் தெரியவருகிறது.
இந் நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடும்போது சரத்பொன்சேகா எம்.பி.யாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வாரென்றும் அதன்பின்னர் அவருக்கு படையினர் நலன்புரி அமைச்சர் அல்லது சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.
இவ் விடயம் தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிடுவதாவது,
நான் எம்.பி.யாக பதவியேற்கின்றமை தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்பட வில்லை. எப்போது என்பது தெரியாது. அமைச்சர் பதவி வழங்குவதா? இல்லையா? என்பதை ஜனாதிபதி பிரதமருமே தீர்மானிக்க வேண்டும். நான் பாராளுமன்றம் வரவேண்டும் என்பது தொடர் பில் எம்.பி பதவி வெற்றிட மேற்படுவதற்கு முன்னரே பிரத மர் ரணில் விக்கிர மசிங்கவுடன் பேச்சுக்கள் இடம் பெற்றன என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating