திடீர் கோடீஸ்வரர்களால் துப்பாக்கி விற்பனை அமோகம்
டெல்லி புறநகரான குர்கானில் ரியல் எஸ்டேட் விலை கிடுகிடுவென பலமடங்கு அதிகரிப்பதால் திடீர் கோடீஸ்வரர்கள் அதிகரித்து வருகின்றனர். பாதுகாப்பு காரணத்துக்காக அவர்களில் துப்பாக்கி வாங்குவோரும் அதிகரித்துள்ளனர். டெல்லியை ஒட்டிய அரியானா எல்லைப் பகுதி நகரம் குர்கான். அபார வளர்ச்சியால் டெல்லி வேகமாக விரிவடைகிறது. எனவே, குர்கான், உ.பி. எல்லை நகரான நொய்டா ஆகியவை அசுர வளர்ச்சி பெற்று வருகின்றன. அங்கு வீடு, மனை விலை குறுகிய காலத்தில் 2 முதல் 5 மடங்கு வரை விலை உயர்கிறது. எனவே, ஒரு சில கிரண்டு வைத்திருப்பவர்களே திடீர் கோடீஸ்வரர்களாகி விட்டனர். ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பவர்கள் நூறு கோடி ரூபாய்க்கு மேல் பணக்காரர்களாகி விட்டனர். நல்ல விலை கிடைக்கும்போது வீடு, மனையை விற்று காசுப் பார்த்து வருகின்றனர். அதற்காக, நில உரிமையாளர்களில் பெரும்பாலோர் இப்போது ரியல் எஸ்டேட் தரகர்களாக மாறி வருகின்றனர். தங்கள் வீடு, மனை மட்டுமின்றி, நண்பர்கள், உறவினர்களின் சொத்து விற்பனையிலும் ஈடுபட்டு காசு பார்க்கின்றனர். இப்படி குர்கான்வாசிகள் பலர் திடீர் கோடீஸ்வரர்கள் ஆகி வருவதால், பாதுகாப்பு கருதி அவர்களில் பலர் துப்பாக்கி வாங்குகின்றனர். நிலமற்ற தரகர்களும் அதிக தொகை வர்த்தகத்தை கையாள்வதால் துப்பாக்கி வாங்குகின்றனர். அதன்மூலம், டெல்லி, புறநகர் பகுதிகளில் துப்பாக்கி உரிமம் பெறுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2004ம் ஆண்டில் வெறும் 60 பேர் மட்டுமே துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றிருந்தனர். அது இந்த ஆண்டு இதுவரை 300 ஆக உயர்ந்துள்ளது. விலை மதிப்புள்ள மனை, வீடு வர்த்தகத்தில் இருப்பதால் துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்கிறார் அசோக் பரத்வாஜ் என்ற தரகர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...