உங்களுக்கு இரத்த அழுத்தம் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்…!!

Read Time:3 Minute, 55 Second

06-1454738371-1-foodஇரத்த அழுத்த குறைவு என்பது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்து, உடலுறுப்புகளுக்கு வேண்டிய இரத்தம் கிடைக்காமல் போனால் ஏற்படும் நிலையாகும்.

இந்த நிலை நீடித்தால் அதுவே பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.

இரத்த அழுத்தம் உடலில் குறைவாக இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

அந்த அறிகுறிகளை கூர்ந்து கவனித்து, உடனே மருத்துவரை சந்தித்து போதிய சிகிச்சைகளைப் பெற்று வந்தால், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். அதற்கு ஒவ்வொருவரும் இரத்த அழுத்த குறைவின் ஆரம்ப அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்.

சரி, இப்போது இரத்த அழுத்தம் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.

தலைச்சுற்றல்

இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளில் முதன்மையானது தலைச்சுற்றல் ஏற்படும்.

அதுவும் நீண்ட நேரம் உட்கார்ந்து எழும் போது, நீண்ட நேரம் நின்றால் மற்றும் உணவு உட்கொண்ட பின் போன்ற தருணங்களில் ஏற்படும்.

மயக்கம்

இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் போது, மூளையில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். இதன் காரணமாக அடிக்கடி மயக்கம் வரக்கூடும்.

உங்களுக்கு இம்மாதிரியான அறிகுறி தென்பட்டால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

மங்களான பார்வை

உடலுறுப்புக்களுக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாமல் இருந்தால், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், உறுப்புக்களின் செயல்பாடு குறைய ஆரம்பிக்கும்.

அதில் ஒன்று தான் மங்களான பார்வை.

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் போது இதயத்துடிப்பில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.

எனவே உங்களுக்கு அடிக்கடி படபடப்பு ஏற்பட்டால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை சந்தியுங்கள்.

வெளிரிய சருமம்

உங்கள் சருமம் வெளிரிய நிறத்தில் காணப்பட்டால், அதுவும் இரத்த அழுத்த குறைவிற்கான காரணமாகும்.

ஏனெனில் சருமத்தின் வெளி அடுக்கு வரை இரத்தம் செல்லாமல் இருப்பதால், சருமத்தின் நிறம் மஞ்சளாக மற்றும் வெளிரிய நிறத்தில் காணப்படும்.

கடினமான கழுத்து

கழுத்து தசைகள் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, சுவாசித்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கைப் பெறுகிறது.

எனவே உங்களுக்கு இரத்த அழுத்த குறைவு இருப்பின், கழுத்து தசைகள் சற்று கடினமாக இருக்கும்.

வியர்வை

இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் போது, வியர்வை அதிகமாக வெளிவரும்.

உங்களுக்கு அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறினால், உடனே அதற்கான காரணம் என்னவென்று மருத்துவரை அணுகி கேளுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரச துறையில் பட்டதாரிகளுக்கான 17,000 வெற்றிடங்கள்…!!
Next post திருகோணமலையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது…!!