கவனம் : மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் மென்பொருள்…!!

Read Time:2 Minute, 17 Second

bvbv (1)தற்காலத்தில் கணினி சார்ந்த மென்பொருள் இருந்தால் மொபைல் போன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க முடிகின்றது. இந்த தருவாயில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் சந்தோஷமடைந்தாலும் ஒரு பக்கம் வியப்படைய செய்யும் பல்வேறு கண்டுபிடிப்புகள் அன்றாடம் வெளியாகி கொண்டே இருக்கின்றது.

கணினியில் குறிப்பிட்ட மென்பொருள் இருந்தால் கன நேரத்தில் ஒருவர் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மனித மூளையில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரோடுகளில் இருந்து வரும் எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் (மின்சாதன சமிக்ஞை) மூலம் மனித மூளையில் நினைப்பவற்றை கணப்பொழுதில் கணிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகளை வைத்து பார்க்கும் போது, ஒரு நாள் இந்த வகை தொழில்நுட்பம் பேச முடியாத, தகவல் பரிமாற்றத்தில் சிரமத்தினை எதிர்கொள்பவர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் என வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணரான ராஜேஷ் ராவ் தெரிவித்துள்ளார்.

மருத்துவ ரீதியாக பார்க்கும் போது இம்முறையை பயன்படுத்தி பக்கவாத நோயாளிகள் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள வழி செய்ய முடியும் என்றும் ராவ் தெரிவித்தார்.

முன்னதாக 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் மனித மூளையில் நினைப்பவைகள் வீடியோ வடிவில் உருவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post WhatsApp group இல் இனிமேல் அதிக உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள முடியும்…!!
Next post இரை தேடி உணவு விடுதிக்குச் சென்று இருக்கையில் அமர்ந்துகொண்ட கடல் சிங்கம்…!!