சரிதா நாயருடன் அந்தரங்க தொடர்பு வைத்திருந்த அரசியல் பிரமுகர்கள் பட்டியல்: நாளை கோர்ட்டில் தாக்கல்..!!
கேரளாவில் கடந்த 2011–ம் ஆண்டு நடந்த சோலார் பேனல் மோசடி விவகாரம் இப்போதும் புயலை கிளப்பி வருகிறது.
இந்த மோசடி தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. மோசடிக்கு சூத்திர தாரியாக கூறப்படும் பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி பல்வேறு திடுக்கிடும் தகவல் களை தெரிவித்து வருகிறார்.
முதல்–மந்திரி உம்மன் சாண்டிக்கு பணம் கொடுத்ததாகவும், இதுபோல அவரது மந்திரிசபையில் இடம் பெற்ற ஆரியாடன் முகம்மது, சிவக்குமார் ஆகியோரும் பணம் பெற்றதாகவும் தெரிவித்தார்.
இதற்கு ஒருபடி மேலே சென்று சரிதாநாயரின் முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் அளித்த சாட்சியத்தில் மோசடிக்கு துணை நிற்க அரசியல் பிரமுகர்கள் பலரும் சரிதாநாயரை இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
முதலில் இதனை மறுத்த சரிதாநாயர், அதன் பிறகு இந்த மோசடி தொடர்பாக அரசியல் பிரமுகர்கள் பலர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.
விசாரணை கமிஷன் முன்பு நேற்று 5–வது நாளாக ஆஜரான அவர், நீதிபதி சிவராஜன் முன்பு பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறினார். அதன் விவரம் வருமாறு:–
கேரளாவில் டீம் சோலார் நிறுவனத்தின் வளர்ச்சியிலும், வீழ்ச்சியிலும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பங்கு உண்டு. முதல்வர் உம்மன் சாண்டி பாலக்காட்டில் உள்ள அரசு தொழிற் பூங்காவில் பல ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்வதாகவும், இடுக்கி கைலாசபாறையிலும் இது போல இடம் ஒதுக்கி தருவதாகவும் உறுதி கூறினார்.
இது தொடர்பாக மின் வாரியத்துறை மந்திரி ஆரியாடன் முகம்மதுவை பலமுறை சந்தித்து பேசினேன். அப்போது அவர் பல நபர்களை டீம் சோலார் கம்பெனியில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார்.
எனது நிறுவனத்தை வளர்த்தெடுக்க பல்வேறு இன்னல்களை சந்தித்தேன். முதல்–மந்திரி உம்மன்சாண்டிக்கு ரூ.1.90 கோடி பணம் கொடுத்தேன்.
பல அரசியல் பிரமுகர்கள் எனக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்தனர். அதற்காக அவர்களின் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினர். அவர்களின் பேச்சை நம்பி பலரிடம் நான், ஏமாந்தேன். அவர்களை பற்றிய அனைத்து விவரங்களும் எனக்கு தெரியும். யார்– யார்? என்னை பயன்படுத்திக் கொண்டனர் என்பதை நன்கு அறிவேன். அவர்களை பற்றிய விவரங்களை பலரும் கூடி இருக்கும் இந்த கோர்ட்டில் கூறுவதற்கு தயக்கமாக உள்ளது. ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டால் அந்த தகவல்களை கூற தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சிவராஜன் இந்த தகவல்களை மூடி முத்திரையிட்ட கவரில் நாளை (4–ந்தேதி) தாக்கல் செய்ய முடியுமா? என்று கேட்டார். அதற்கு சரிதாநாயர் ஒப்புக் கொண்டார். தனது வக்கீலுடன் கலந்து ஆலோசித்து பட்டியலை தாக்கல் செய்வேன் என்று கூறினார்.
சரிதாநாயர் நாளையும் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளார்.
இதனால் சரிதாநாயருடன் தொடர்பில் இருந்த அரசியல் பிரமுகர்கள் பலரும் கலக்கம் அடைந்துள்ளனர். பட்டியலில் யார்–யார்? இடம் பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு கேரளாவில் பரபரப்பை எகிற வைத்துள்ளது.
Average Rating