காரில் சிக்கியிருப்பதாகக் கருதப்பட்ட பெண்ணுக்கு உதவ முயன்ற நபர் அதிர்ச்சி…!!

Read Time:2 Minute, 43 Second

tyuyuகாரில் சிக்கியிருப்பதாகக் கருதப்பட்ட பெண்ணுக்கு உதவ முயன்ற நபர் ஜோடியொன்று பாலியல் உறவில் ஈடுபட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி-

கார் ஒன்றின் பின் பகுதியில் பெண்ணொருவர் சிக்கிக் கொண்டிருப்பதாகக் கருதி அப்பெண்ணுக்கு உதவி செய்ய முயன்ற நபர் ஒருவர், அக்காருக்குள் ஜோடியொன்று பாலியல் உறவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ஜோ கிறேக் என்பவர் தான் எதிர்கொண்ட இந்த அதிர்ச்சி அனுபவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட டுவிட்கள் மூலம் விபரித்துள்ளார்.

“சில தினங்களுக்கு முன் கிழக்கு பின்ச்லே எனும் பகுதியில் எனது நாயுடன் இணைந்து நரிகளை துரத்திக்கொண்டிருந்தேன். அப்போது வாகனமொன்றின் பின்பகுதியிலிருந்து சத்தமொன்று கேட்டது.

அவ்வாகனத்துக்குள் யாரே சிக்கியிருக்கிறார்கள் என நான் எண்ணினேன்.
அருகில் நெருங்க நெருங்க யாரோ கூச்சலிடுவது கேட்டது. அதனால் எனது நாயையும் இழுத்துக்கொண்டு காரின் அருகில் சென்றேன்.

நான் துரிதமாக செயற்பட வேண்டியிருக்கும் என நினைத்தேன்.

காரை நெருங்கி, அக்காரின் கதவைத் திறந்தபோது பெண் ஒருவரின் முகம் தெரிந்தது.

அப்பெண் நிர்வாணமாக இருந்ததை உணர்ந்தேன். அவருடன் ஆண் ஒருவரும் நிர்வாணமாக இருந்தார்.

அது ஒரு சிறிய கார். அக்காரின் பின் ஆசனத்தை பின்புறமாக விரித்து விட்டு அவர்கள் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளதை உணர்ந்தேன்.

இருவரும் திகைப்புடன் என்னைப் பார்த்தனர். அதையடுத்து, “மன்னிக்கவும் உங்களை யாரோ பணயக்கைதியாக வைத்திருக்கிறார்கள் என எண்ணிவிட்டேன்” எனக் கூறிவிட்டு நான் திரும்பினேன்” என ஜோ கிறேக் தெரிவித்துள்ளர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவனின் தலை பேணிக்குள் சிக்கியது – சவூதி சிவில் பாதுகாப்புப் படையினர் காப்பாற்றினர்..!!
Next post காணாமல் போன ஐந்து மீனவர்களும் சடலமாக மீட்பு…!!