சீனாவில் இணையம் மூலம் நிதி மோசடி: 21 பேர் கைது…!!

Read Time:1 Minute, 30 Second

c2f2ca81-d6f7-4892-9a35-7b3db8e539f0_S_secvpfசீனாவில் இணையம் மூலமாக செயல்படும் நிதிநிறுவனங்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து சீன போலீசார் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இசூபாவ் என்ற நிதிநிறுவனம் இணையம் வழியாக சுமார் 9 லட்சம் முதலீட்டாளர்களிடம் பல்வேறு திட்டங்களுக்கென முதலீட்டினை பெற்று மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அந்த நிறுவனம் வெளியிட்ட திட்டங்களில் 95 சதவீதம் போலியானவை எனவும் தெரிகிறது. இதுபோன்ற மோசடிகள் மூலம் அந்த நிறுவனம் இதுவரை 760 கோடி டாலர் (சுமார் ரூ.45 ஆயிரத்து 600 கோடி) வரை கையாடல் செய்து உள்ளது.

இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவர் உள்பட 21 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த நிறுவனத்துக்கான இணைய முகவரி முடக்கப்பட்டது. மேலும் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய மற்ற நிறுவனங்களுக்கு சீல் வைத்ததோடு அவற்றின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அல்சர் பிரச்சனைக்கான சில எளிய கிராமத்து வைத்தியங்கள்…!!
Next post சிறுவனின் தலை பேணிக்குள் சிக்கியது – சவூதி சிவில் பாதுகாப்புப் படையினர் காப்பாற்றினர்..!!