கார் மோதி விபத்துக்குள்ளானவர் பெயர் கின்னஸ் சாதனை பதிவேட்டில்

Read Time:2 Minute, 23 Second

அமெரிக்காவில் கார் விபத்தொன்றில் 118 அடி தூரம் தூக்கி வீசப்பட்டவர் கின்னஸ் சாதனை பதிவேட்டில் இடம்பெற்றுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் திகதி விபத்தொன்றில் சிக்கியவர்களுக்கு இவர் உதவி செய்துகொண்டிருந்த போது மணிக்கு 113 கி.மீ. வேகத்தில் வந்த காரொன்று இவர் மீது மோதியதில் 118 அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கைச் சேர்ந்த மாச்யூ மெக்னைட் என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கியவராகும். இவர் வாய்பேச முடியாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிபுணராக இருப்பதுடன் தீயணைப்பு வீரராகவும் கடமையாற்றி வருகிறார். இவ்விபத்தில் இவரது தோள், இடுப்பு, எலும்பு,முள்ளந்தண்டின் அடிப்பகுதி போன்ற இடங்களில் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரு வார கால சிகிச்சைக்குப் பின்னர் 80 நாட்கள் உடற்பயிற்சியும் மேற்கொண்டு சுகதேகியானார். இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் எரிக் நகைச்சுவை மிக்கவொருவர் என்பதால் இச் சம்பவத்தை கின்னஸில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற நோக்குடன் இச்சம்பவம் குறித்த சகல ஆவணங்களையும் சமர்ப்பித்ததனைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு கின்னஸ் பதிவேட்டில் மாத்யூ இடம்பெறுகிறார். இவ்விடயம் தொடர்பில் மாத்யூ தெரிவிக்கையில்; இது ஒரு பெரிய நகைச்சுவை. மருத்துவர் எரிக் எப்போதும் நகைச்சுவையாகவே தான் பேசுவார். இப்படிப்பட்ட ஒரு சம்பவத்துக்காக எனது பெயர் கின்னஸ் சாதனைப் பதிவேட்டில் இடம்பெறுமென்று நான் எதிர்பார்க்கவில்லையெனத்’ தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வியட்நாம் விமானத்தில் ஊர்ந்த தேள்கள்
Next post எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய மைதானத்துக்கு முரளியின் பெயர்