200 கிலோ எடை, 7 அடி உயர ராட்சத பறவை இனத்தை தின்றே அழித்த ஆதிமனித இனம்…!!

Read Time:2 Minute, 8 Second

sdfdfvbஅவுஸ்திரேலியாவில் 200 கிலோ எடை, 7 அடி உயர ராட்சதப் பறவை இருந்ததையும் அந்த பறவை இனத்தை அப்போதைய மனித இனம் தின்றே அழித்துள்ளதாகவும் புதிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக் கழக ஆய்வுகள் இதனை தெரிவித்துள்ளன.

அவுஸ்திரேலியாவில் இருந்த 45 கிலோவுக்கும் அதிக எடையுள்ள பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன ஆகிய விலங்குகளை அப்போதைய முதல் மனிதர்கள் காட்டுத் தனமாக வேட்டையாடி அழித்துள்ளனர்.

இதில் ஜென்யார்னிஸ் நியுடொனி என்ற ஒரு பறக்கவியலா பறவை 50,000 ஆண்டுகளுக்கு முன்பாக மனிதவாடை இல்லாத காலக்கட்டத்தில் வாழ்ந்து வந்தது என்றும் இதன் எடை 200 கிலோவாக இருக்கலாம் என்றும் உயரம் 7 அடியாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பறவையைப் பிடித்து அழித்து தின்றதோடு அதன் முட்டைகளையும் கபளீகரம் செய்ததால் அந்த பறவை இனம் மறு உற்பத்தி இல்லாமல் அழிந்தே போய் விட்டது.

சமைத்து முடித்த ஜென்யார்னிஸ் பறவையின் முட்டைகளின் எச்ச சொச்சங்கள் அவுஸ்திரேலியா நெடுக பல்வேறு பகுதிகளில் சுமார் 2000 இடங்களிலிருந்து திரட்டப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முட்டைகளை சமைத்த விதம் குறித்த தடயங்கள் இந்தப் பறவைகள் காட்டுத்தீயில் அழியவில்லை, மனித உணவு வேட்டையினால் அழிந்தது தெரியவந்துள்ளது என்று கொலராடோ பல்கலைக் கழக பேராசிரியர் மில்லர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண வைபவம் நடைபெற்ற மண்டபத்துக்குள் நிர்வாண கோலத்தில் புகுந்த நபர்…!!
Next post எலிப்பொறிகளை வைத்து இவங்க செய்ற வேலையைப் பாருங்க…!!