இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் சுஷ்மா சுவராஜுக்கு அறிக்கை: மஹிந்த அமரவீர…!!

Read Time:2 Minute, 21 Second

VDSஇந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சிடம் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளோம் என கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் இவ்வறிக்கை கையளிக்கப்படும்.

மேலும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மீனவர் பிரச்சினை தொடர்பாக எமது அமைச்சுடன் பேச்சு நடத்த எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரையில் எமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்து கடல்வளங்களை அள்ளிச் செல்வதற்கு இந்திய (தமிழ் நாட்டு) மீனவர்களுக்கு இடமளிக்க முடியாது.

எனவே இவ்விடயத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதேவேளை இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை மீளக்கையளிப்பதென்ற பேச்சுக்கே இடமில்லை.

மீனவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி சட்ட நடவடிக்கைகளை எடுப்போம். மீனவர்களை விடுதலை செய்வதற்கு ஆட்சேபம் தெரிவிக்க மாட்டோம். ஆனால் படகுகளை விடுவிக்க மாட்டோம்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் ரோலர் படகுகள் மூலம் எமது மீன் வளங்களையும் கடற்தாவரங்களையும் அள்ளிச் செல்கின்றனர்.

இதனால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுகிறது. இந்திய ரோலர்கள் அத்துமீறுவதை எனது கண்களால் கண்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் மிகப்பெரிய அபூர்வ எக்கணைட் இரத்தினக்கல் இலங்கையில்…!!
Next post நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி தீக்கிரை…!!