சீனாவினால் அமைக்கப்படும் மிதக்கும் அணுமின் நிலையம்..!!

Read Time:1 Minute, 34 Second

yuyநிலத்தில் அமைந்துள்ள அணு உலைக்கு எதிரான கோரிக்கைகள் பல்வேறு நாடுகளில் எழுந்து வரும் நிலையில், கடலில் மிதக்கும் அணுமின் நிலையத்தை அமைக்கத் சீனா திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீன அணுசக்திக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் ஜு டாஷே தெரிவிக்கையில், “சீனாவின் அணுமின் உற்பத்தியை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடலில் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இதையொட்டி, கடல் வளத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள சீனா முடிவு செய்துள்ளது” என்றார்.

கடலில் விமானம் தாங்கிக் கப்பல்களிலும், நீர்மூழ்கிக் கப்பல்களிலும் அணுசக்தி நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கடலில் அணுசக்தி உற்பத்தி செய்யப்படுவதில் ரஷ்யாவிற்கு அடுத்து சீனா இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மர்ம நபரால் கொலை செய்யப்பட்டுள்ள 13 வயதேயான சிறுமியின் சடலம் மீட்பு…!!
Next post பெண்­களை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தா­தீர்கள் பொது இடத்தில் சிறுநீர் கழிக்­கா­தீர்கள்…!!